ரஞ்சனுடனான தொலைபேசி குரல் பதிவு - மேல் நீதிமன்ற நீதிபதி பிலபிட்டியவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை !

Published By: Digital Desk 4

25 Oct, 2021 | 09:56 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல்பதிவு விவகாரத்தில்,  மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான நுகேகொடை நீதிவான் நீதிமன்ற வழக்கை விசாரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்தது. 

இதற்காக நீதிவான் பி /299/2020 எனும் குறித்த வழக்கை விசாரிப்பதை தடுக்கும் 'புரோஹிபிஷன் ரிட்' (Writ of Prohibition) எனப்படும்  ஒரு நீதிமன்றம் தன் அதிகாரத்தை மீறி செயற்படாதவாறு பிறப்பிக்கப்படும் தடை நீதிப் பேராணையையும் மேன் முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அத்துடன், குறித்த வழக்கில் 2 ஆவது சந்தேக நபராக நீதிபதி கிஹான் பிலபிட்டியவை பெயரிட்ட சட்ட மா அதிபரின்  ஆலோசனையையும் வலுவிழக்கச் செய்து மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்க சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபராக தன்னை பெயரிட்டு இடம்பெறும் வழக்கு விசாரணைகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய மேன் முறையீட்டு நீதிமன்றில்  ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். 

அது குறித்த விசாரணைகளின் நிறைவில்,  மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி சோபித்த ராஜகருணா, நீதிபதி தம்மிக கனேபொலவின் இணக்கத்துடன் மேற்படி 8 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பினை வழங்கினார்.

இந்த ரிட் மனுவில் நுகேகொடை நீதிவான் மொஹம்மட் மிஹால் ( தற்போது மேல் நீதிமன்ற நீதிபதி), சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரம ரத்ன அகையோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.  அரசியலமைப்பின் 140 ஆம் உறுப்புரைக்கு அமைய மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், மனுதாரரான நீதிபதி கிஹான் பிலபிட்டிய சார்பில் சட்டத்தரணிகளான சுதத் கல்தேரா, நிரான் அங்கிடெல் ஆகியோருட்ன் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகியிருந்தார். 

2 ஆம் பிரதிவாதியான சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சஹீதா பாரியும் 3 ஆம் பிரதிவாதி பொலிஸ் மா அதிபருக்காக சட்டத்தரனி கருணாரத்னவுடன் ஜனாதிபதி சட்டத்தரனி உதித்த இகலஹேவாவும் ஆஜராகியிருந்தனர்.

இந் நிலையில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல்பதிவு விவகாரத்தில்,  மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிராக போதுமான சாட்சிகள் எதுவும் இல்லை என பொலிஸ் மா அதிபர் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு கடந்த 15 ஆம் திகதி   அறிவித்துள்ளார்.

 பொலிஸ் மா அதிபர் சார்பில்  மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா, இதனை வெளிப்படுத்தினார்.

இவ்வாறான பின்னனியிலேயே குறித்த வழக்கின் தீர்ப்பினை அறிவித்த மேன் முறையீட்டு நீதிமன்றம், நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை விதித்து தீர்ப்பளித்தது.

முன்னதாக கடந்த 2020 ஜூன் 08 ஆம் திகதி, நீதிவான் நீதிமன்ற விசாரணைகளுக்கு இடைக்கால தடை  மேன் முறையீட்டு நீதிமன்றால் விதித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38