5 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்பட்ட வீதியின் இன்றைய நிலை - பொதுமக்கள் விசனம்

Published By: Gayathri

25 Oct, 2021 | 07:41 PM
image

நுவரெலியா பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் 476A கிரிமிட்டி பிரிவுக்கு சொந்தமான கார்லிபேக் தோட்டத்தில் பாடசாலை வழியாக குடியிருப்புகளுக்கு செல்லும் பாதையை ஐந்து  இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பாதை புனரமைக்கப்பட்டது. 

இப்பாதை புனரமைத்து ஒரு வருட காலங்கள்கூட பூர்த்தியாகாத நிலையில் உரிய முறையில் வடிகாலமைப்பு அமைக்கப்படாமையினால் ஆறுகளில் செல்ல வேண்டிய நீர் இப் பாதையின் ஊடாக வருவதால் இப் பாதைக்கு அருகாமையில் உள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள்  சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

இன்று (25) திங்கட்கிழமை  பாடசாலை ஆரம்பிக்கப்பட்டபோதிலும் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது அவர்களின் சீருடைகள் எல்லாம் அழுக்கு நீர் பட்டநிலையில்  வருகை தந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. 

இந்த நிதியானது நுவரெலியா பிரதேச செயலகத்தின் கீழ் ஒதுக்கப்பட்டு 476A கிராம சேவகர் பிரிவின் கண்காணிப்பில் இந்த வீதி புனரமைக்கப்பட்டது. 

இதன் முழு பாதையும் 150 அடி கொண்டது. இதில் பாதை கொங்ரீட் 135 அடி மாத்திரம் இடப்பட்டுள்ளது. அதில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்று இருக்கின்றது என இப்பிரதேச மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனை கண்டிப்பதாகவும் இவ் வீதியின் ஓரங்களை ஒழுங்கான முறையில் அமைத்துத் தருவதற்கு அரசியல் வாதிகளும் நுவரெலியா பிரதேச செயலாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41