ஜனாதிபதி செயலணி எடுத்த தீர்மானத்திற்கமையவே செயற்படுகின்றோம் - புகையிரத திணைக்களம்

Published By: Digital Desk 4

25 Oct, 2021 | 08:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத பருவகால அட்டை (சீசன்) உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையை பயன்படுத்த வேண்டும். என்ற தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சோ  அல்லது  புகையிரத திணைக்களமோ எடுக்கவில்லை.

சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களுக்கு அமைய கொவிட்-19 தடுப்பு ஜனாதிபதி செயலணி எடுத்த தீர்மானத்தை செயற்படுத்தியுள்ளோம். 

இத்தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

பருவகால அட்டை உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த முடியும்.என்ற தீர்மானம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்மேலும் குறிப்பிடுகையில்,

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மாகாண எல்லைக்குட்பட்ட வகையில் பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று மாத்திரம் 130 இற்கும் அதிகமான புகையிரத பயண சேவைகள் காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றுக் கொண்ட பருவகால அட்டையை (சீசன்) இம்மாதம் முழுவதும் பயன்படுத்த முடியும்.

பருவகால அட்டை உள்ளவர்கள்மாத்திரம்தான்புகையிரத சேவையினை பயன்படுத்த வேண்டும்.என்ற தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சோ,புகையிரத திணைக்களமோ முன்னெடுக்கவில்லை. புகையிரத சேவையில்சமூக இடைவெளியை பேணுவது சாத்தியமற்றதாக உள்ளது.இவ்வாறான நிலையில்நிபந்தனையின் அடிப்படையில் புகையிரத சேவையை மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டது.

பருவகால அட்டை உள்ளவர்கள் மாத்திரம் தான் புகையிர சேவையை பயன்படுத்த முடியும்.என்ற தீர்மானம்சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய கொவிட்-தடுப்பு ஜனாதிபதி செயலணியால் முன்னெடுக்கப்பட்டது.இத்தீர்மானத்தை மாற்றுவதற்கு பலசந்தர்ப்பங்களில் முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும். அப்போது பருவகால அட்டை என்ற வரையறை தளர்த்தப்படும்.என எதிர்பார்க்கிறோம்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02