போராட்டத்திற்கு தயாராகும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்

Published By: Digital Desk 3

25 Oct, 2021 | 04:34 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத பருவகால அட்டை (சீசன்) உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த முடியும் என்ற தீர்மானம் பருவகால அட்டை இல்லாதவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுப்படுவார்கள் குறித்து போக்குவரத்து அமைச்சு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இப்பிரச்சினைக்கு புகையிரத திணைக்களம் உரிய தீர்வை முன்வைக்காவிட்டால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படுவோம் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

குருநாகலில் உள்ள புகையிரத நிலைய அதிபர் சங்க காரியாலயத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்மேலும்குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ்தாக்கம் குறைவடைந்ததை தொடர்ந்து பயணிகள் புகையிரத சேவை மாகாண எல்லைக்குள் மாத்திரம் வரையறுத்ததாக இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வகுக்கப்படவில்லை.

புகையிரத பருவகால அட்டை உள்ளவர்களுக்கு மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பருவகால அட்டையில்லாதவர்கள் அத்தியாவசிய சேவையில் ஈடுப்படும்போது பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

ஆசன ஒதுக்கல் முறைமை ஊடாக பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்குமாறு புகையிரத திணைக்களத்திற்கு பலமுறை ஆலோசனை வழங்கியுள்ளோம்.

பருவகால அட்டை உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்துவதால் புகையிரத திணைக்களம் இலாபமடைந்துவிடாது. இதனால் ஏற்கெனவே நட்டத்தில் இயங்கும் புகையிரத திணைக்களம் மேலும் நட்டமடைய நேரிடும்.

அனைத்து பயணிகளும்புகையிரத சேவையை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கான சிறந்த திட்டங்களை புகையிரத திணைக்களம் செயற்படுத்த வேண்டும் இல்லாவிடின் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47