மீண்டும் சசிகலா

Published By: Digital Desk 2

25 Oct, 2021 | 04:07 PM
image

குடந்தையான்

அண்மையில் நிறைவடைந்த தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க.,அசுர வெற்றியை பெற்று பெற்றதன் மூலம், எதிர்க்கட்சியே இல்லாத நிலை உருவாகியிருக்கிறது.அத்துடன் இது ஜனநாயக அரசியலுக்கு ஏற்றதல்ல என்றதொரு கருத்தும் காணப்படுகின்றது.

இதன் காரணமாகவே கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலில் இருந்து விலகுகிறேன்என்று அறிவித்து, தீவிர அரசியல் பணியிலிருந்து ஒதுங்கிய அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்ஸ்ரீசெயலாளரானசசிகலா, அ.தி.மு.க.வின் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்குபற்றி தன்னுடைய அரசியல் மறுபிரவேசத்தைஉறுதிப்படுத்தியிருக்கிறார். இது அ.தி.மு.க. கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும்,அதனை வரவேற்பது ஆரோக்கியமானது என்ற கருத்தும் காணப்படுகின்றது.

சட்டமன்ற தேர்தல் முடிவிற்குப் பிறகு சசிகலா, அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும்நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் பேசிய ஒலிப்பதிவைக் கசியவிட்டு தனது அரசியலை ஆரம்பித்தார். 

அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 16ஆம் திகதியன்று ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவிஅஞ்சலி செலுத்தியதுடன், அ.தி.மு.க.வின் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எம்.ஜி.ஆரின்நினைவில்லத்தில் கட்சி கொடியை ஏற்றியதுடன், கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்தார். 

அந்த கல்வெட்டில் சசிகலாவின் பெயருக்கு கீழ் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பதவியின்பெயரும் இடம் பெற்றிருந்தது. 

சசிகலாவின் இச்செயற்பாடுகளுக்கு வழக்கம்போன்றே முதலில் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றார்முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால் முன்னாள் முதல்வர்களான பன்னீர்செல்வம் மற்றும்எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எவ்விதமான கருத்தையும் வெளிப்படுத்தாமல் மௌனமாக இருக்கிறார்கள். 

இதனை சாதகமாக்கி, விரைவில் புரட்சி தாய் சசிகலாவின் தீவிர அரசியல் பணி ஆரம்பமாகும்என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் சசிகலா மீண்டும் அரசியலில்நேரடியாக ஈடுபடுவதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. மற்றும் மாநிலத்தை ஆளும் தி.மு.க.வின்மறைமுக ஆசி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-24#page-17

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04