சரிவு காணும் தேசியவாத அரசாங்கம்

Published By: Digital Desk 2

25 Oct, 2021 | 04:05 PM
image

சத்ரியன்

"பொதுஜன பெரமுனவின் முடிவுகளில் ஏதேனும் அதிருப்திஎன்றால், அதுகுறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் அமைச்சர் பஷில்ராஜபக்ஷவிடமும் பேசுங்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தட்டிக் கழித்துள்ள  சூழலில், பங்காளிக்கட்சிகள் பிரதமர் மஹிந்த மற்றும் பஷில் ராஜபக்ஷவை எவ்வாறு அணுகப் போகின்றன"

“பொதுஜன பெரமுன கூட்டணிக்குள் அதிகரித்து வரும் முரண்பாடுகள் தீவிரமடையும் பட்சத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், அதிருப்தியில் உள்ள பங்காளிகளும் ஓரணியில் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன”

 அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கானஏற்பாடுகளில் அரசாங்கம் இறங்கியுள்ள நிலையில், ஆளும்கட்சிக் கூட்டணிக்குள்விரிசல்கள் அதிகரித்து வருகின்றன.

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவது, பொதுஜன பெரமுனவை ஆட்சியில்அமர்த்துவது ஆகிய இலக்குகளை அடைவதில், முக்கியமான பங்கைவகித்தவை, பங்காளிக்கட்சிகள்.

2015 தோல்வியுடன் தங்காலைக்குள் முடங்கவிருந்த மஹிந்த ராஜபக்ஷவை,மீண்டும் அரசியல் மேடைக்கு கொண்டு வந்து சேர்த்தவர்கள்.

விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்கள் அதில்முக்கியமானவர்கள்.

இவர்கள், அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே பல்வேறு பிரச்சினைகளில்முரண்பட்டு வருகின்றனர்.

20ஆவது திருத்தச்சட்டத்தில், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்தேர்தலில் போட்டியிடவும், தெரிவு செய்யப்படுவதற்கும், இருந்த தடையை நீக்குவதற்குஎதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

அப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தலையிட்டு, புதியஅரசியலமைப்பில் அவ்வாறான ஏற்பாடு நீக்கப்படும் என்று உறுதி அளித்து, 20வதுதிருத்தச்சட்டத்துக்காக அவர்களை கைதூக்க வைத்திருந்தார்.

அதற்குப் பின்னர், கிழக்கு கொள்கலன் துறைமுக விடயத்தில்,கெரவலப்பிட்டிய எரிவாயு மின் நிலைய பங்குகள் கைமாற்றப்பட்ட விடயத்தில் என்று,அரசாங்கத்துக்குள் இருந்தவாறே பங்காளிக் கட்சிகள் தொடர்ச்சியாக முரண்பட்டுவருகின்றன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-24#page-19

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54