மக்களே அவதானம் ! இவ்வாண்டில் டெங்கு பரவல் அதிகரிப்பு

Published By: Digital Desk 4

24 Oct, 2021 | 10:16 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்று குறைவடைந்து வருகின்ற போதிலும் , மறுபுறம் டெங்கு பரவல் அதிகரித்து வருதாகவும் , எனவே பொது மக்கள் தமது சுற்றாடலையின் தூய்மையைப் பேணுவதோடு மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளுக்கமைய இவ்வாண்டில் இம்மாதம் முதலாம் வாரம் வரையில் 20 811 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் 688 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் 10 மாதங்களில் 20 இற்கும் அதிக டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் , கடந்த ஆண்டு முழுவதிலும் 34 411 டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டிருப்பதாகவும் , கடந்த ஆண்டு வாரமொன்றுக்கு சுமார் 269 டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இரண்டு நாட்களுக்கும் அதிகமாக காய்ச்சல் நீடித்தால் நிச்சயமாக வைத்தியரை நாடுமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் வலியுறுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38