அசாத் சாலி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்

Published By: Digital Desk 4

24 Oct, 2021 | 10:00 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

விளக்கமறியல் உத்தரவின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று 25 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Articles Tagged Under: அசாத் சாலி | Virakesari.lk

கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய அவரை இவ்வாறு இன்று மன்றில் ஆஜர்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் தயாராகி வருவதாக அறிய முடிகிறது.

அசாத் சாலி சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் உள்ளிட்ட குழுவினருடன் ஆஜராகி ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குனரத்ன நகர்த்தல் பத்திரம் ஊடாக கடந்த 13 ஆம் திகதி  முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டு,  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரண ராஜா,  அசாத் சாலியை மன்றில் ஆஜர் செய்வதற்கான உத்தரவை சிறைச்சாலைகள்  அத்தியட்சருக்கு பிறப்பித்திருந்தார்.

 அசாத் சாலி, நீண்ட நாட்களாக விளக்கமறியல் உத்தர்வின் கீழ்  உள்ள நிலையில், அவருக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதமே விசாரணைக்கு வரவிருந்தது.

நீண்ட கால விளக்கமறியலை கருத்தில் கொண்டு, அவரின் வழக்கை முன் கூட்டியே விசாரணைக்கு எடுக்குமாறும் அது தொடர்பில் ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுப்பது சிறந்தது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குனரத்ன கடந்த 13 ஆம் திகதி மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனை ஆராய்ந்தே, அசாத் சாலிக்கு எதிரான வழக்கை இன்று 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானித்திருந்த நீதிபதி, இன்றையதினம் அவரை மன்றில் ஆஜர் செய்ய சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படியே அவர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார் என தெரிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47