சிறுவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் சடுதியாக குறைவு - விசேட வைத்திய நிபுணர் 

Published By: Digital Desk 4

24 Oct, 2021 | 09:50 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றாளர் மற்றும் தொற்றுக்கு உள்ளானோர் உயிரிழக்கும் வீதம் குறைவடைந்து வருவதற்கு சமாந்தரமாக சிறுவர்கள் தொற்றுக்குள்ளாகும் வீதமும் , உயிரிழக்கும் வீதமும் சடுதியாக குறைவடைந்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் ஷாமன் ரஜீந்திரஜித் தெரிவித்தார்.

சிறுவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த தினங்களில் சிறுவர் வைத்தியசாலையின் சிகிச்சை விடுதிகளில் பெருமளவில் கொவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் தற்போது அவற்றில் எந்த தொற்றாளர்களும் இல்லை. அதற்கமைய வைத்தியசாலையில் சுதந்திரமாக மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம்.

கொவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சிகிச்சை விடுதிகள் அனைத்தும் ஏனைய நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. தற்போது கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையும் , கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்கள் உயிரிழக்கும் வீதமும் சடுதியாக குறைவடைந்து வருகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47