ஆளும் கூட்டணியில் அமைச்சர் விமல் உள்ளிட்ட சிறு கட்சிகள் எதிர்ப்பு கோஷம் : பிரேரணைக்கு பெரும்பான்மை ஆதரவில் அரசு சந்தேகம்

23 Oct, 2021 | 11:00 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இந்தியாவின் அழுத்தத்திற்கு அச்சப்பட்டு மாகாண சபை தேர்தலை நடத்த கூடாது என ஆளும் கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிறு கட்சிகள் பலவும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வலியுறுத்தி வருகின்றனர். 

ஆனால் அடுத்த வருடம் முதல் காலாண்டில் தேர்தலை நடத்தி விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது.

 மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ஆளும் கட்சிக்குள் இருவேறு கருத்துகள் எழுந்துள்ளன. 

இந்தியாவின் அழுத்தத்திற்கு அடிப்பணிந்து தேர்தலை நடத்த கூடாது என ஆளும் கூட்டணியின் பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் சிறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியாவிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என கூறி அரசாங்கம் ஆளும் கட்சிக்குள் எழுந்துள்ள கருத்து முரண்பாடுகளுக்கு பதிலளித்து வருகின்றது. 

இதனடிப்படையில் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட சிக்கலை சரிசெய்து ஜனவரி மாதத்தில் தேர்தல் முறைமை தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஆனால் குறித்த பிரேரனையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட வேண்டிய தேவை காணப்படுகின்ற நிலையில் அதற்கு ஆளும் கட்சிக்குள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் குழுவினர் ஆதரவு அளிப்பார்களா என்ற சந்தேகம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. 

உயர் அரசியல் மட்டத்தில் இந்த விடயம் பேசப்பட்ட நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி , தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன வெளிப்படையாகவே  மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளன. 

மறுப்புறம் இந்த கட்சிகள் அனைத்துமே மாகாண சபை தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் தீர்மானங்களை எடுத்து செயற்பட்டு வருகின்றன.

 ஆனால் ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட பங்காளிகள் பலர் தேர்தலை இத்தருணத்தில் நடத்துவது அரசாங்கத்திற்கு சாதகமாக அமையாது என குறிப்பிட்டும் இந்திய அழுத்தத்தை சாடியும் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 

குறிப்பாக  அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையேற்றம் , உரம் பிரச்சினை , அமெரிக்க மின் திட்ட விவகாரம் மற்றும் கொழும்பில் காணிகள் விற்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மேலெழுந்துள்ளமையும் காரணமாக காட்டி தேர்தலுக்கு செல்வது புத்திசாலித்தனமான செயல் அல்ல என வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04