ரோயல் -  தோமியன் கல்லூரி அணிகளின் 'நீலங்களின் சமர்' மாபெரும் கிரிக்கெட் போட்டியை நடத்த தீர்மானம்

Published By: Digital Desk 2

23 Oct, 2021 | 08:16 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தடவைகள் பிற்போட்டுவந்த கொழும்பு ரோயல் மற்றும் கல்கிஸ்ஸை சென்.தோமஸ் கல்லூரிகளின் நீலங்களின் சமர் என வர்ணிக்கப்படும் மா பெரும் கிரிக்கெட் போட்டியை (BIG MATCH) நடத்த போட்டி ஏற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி 142 ஆவது தடவையாக நடத்தப்படவுள்ள ரோயல்- தோமியன் மாபெரும் கிரிக்கெட் போட்டி இம்மாதம் 28 ஆம்,29ஆம், 30 ஆம் திகதிகளில் கொழும்பு எஸ்.எஸ்.சீ. கிரிக்கெட் மைதானத்தில் நடத்த போட்டி ஏற்பாட்டு குழு தீர்மானித்துள்ளது.

நீலங்களின் சமர் போட்டியானது இவ்வாண்டின் மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே மாதத்துக்கு பிற்போடப்பட்டது. எவ்வாறாயினும், மே மாதத்தின்போதும் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து காணப்பட்டதால், திகதி குறிப்பிடப்படாது பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது கொரோனா அச்சுறுத்தல் நிலைமை சற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளமை காரணமாக உலகின் நீண்ட காலமாக  தொடர்ச்சியாக நடத்தப்படும் போட்டி என்றதன் காரணமாக பார்வையாளர்கள் எவருமின்றி இப்போட்டியை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கல்லூரிகள்  பங்குகொள்ளும் 'நீலங்களின் சமர்'  மா பெரும் கிரிக்கெட் போட்டியானது  உலகின் மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் மா பெரும் கிரிக்கெட் போட்டியாக விளங்கிறது. இந்த  நீலங்களின் சமர் போட்டியானது, அவுஸ்திரேலியாவின் சென்.பீட்டர்ஸ் கல்லூரி மற்றும் பிரின்ஸ் அல்பிரெட் கல்லூரிகளின் கிரிக்கெட் போட்டிக்கு அடுத்ததாக உலகின் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியாகும். 

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 142 ஆவது 'நீலங்களின் சமர்'  போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.தோமஸ் அணி தமது முதல் இன்னிங்ஸில் 128.2 ஓவர்களில் சகல விக்‍கெட்டுக்களையும் இழந்து 369 ஓட்டங்களை பெற்றது. இதில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடியிருந்த ரோயல் அணி 104.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டத்தை இடைநிறுத்தியது. 

இதைத் தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய  சென்.தோமஸ் அணி 48 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டம் நிறைவுக்கு வந்தது. 

எனினும், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நீலங்களின் சமரில் சென்.தோமஸ் அணி வெற்றி பெற்றிருந்தமையால் தொடர்ந்தும் வெற்றிக் கிண்ணம் அவர்கள் வசமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35