'வோரியர்' ரக்பி கிண்ணத் தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பம்

Published By: Digital Desk 2

23 Oct, 2021 | 08:15 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ் ஆகியவற்றின் ஒன்றிணைந்த ரக்பி குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'வோரியர்' ரக்பி கிண்ணத் தொடர் இமாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் கொழும்பு 'பொலிஸ் பார்க்' மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. 

இப்‍போட்டித் தொடரின் முதலாவது போட்டி 30 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப் போட்டி 31 ஆம் திகதி மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

ரக்பி செவன்ஸ் போட்டியாக, அதவாது அணிக்கு 7 பேர் கொண்டதாக நடத்தப்படும் இப்போட்டித் தொடரில், இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ் ஆகியவற்றிலிருந்து தலா 2 அணிகளும் பங்கேற்கவுள்ளதுடன் சீ.எச். அண்ட் எப்.சீ. அணியும் ஹெவ்லொக்ஸ் அணியும் இப்போட்டித் தொடரில் விளையடாவுள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படவுள்ள  ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டித் தொடரில் இலங்கை ரக்பி அணி பங்கேற்கவுள்ளது. 

ஆகையால், 'இலங்கை ரக்பி குழாத்துக்கு வீரர்களை தெரிவு செய்யப்படுவதற்காகவே, வோரியர்' ரக்பி கிண்ணத் தொடரை இலங்கை ரக்பி சம்மேளனம் நடத்துகிறது. 

சுகாதார  வழிமுறைகளுக்கு அமைவாக நடத்தப்படும் இப்போட்டித் தொடரை  கண்டுகளிப்பதற்கு இரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எனினும், இப்போட்டியை தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களில்  நேரடியாக கண்டுகொள்ள முடியும் என போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09