ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் திங்கள் முதல் ஆரம்பம் - கல்வி அமைச்சு

23 Oct, 2021 | 11:46 AM
image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் ஆரம்ப பிரிவுகளை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவிக்கையில் ,

ஆரம்ப பிரிவினை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும். 

200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் முதற்கட்டமாக நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் மேற்கூறப்பட்டவாறு பாடசாலைகள் திறக்கப்படும். 

அதாவது 200 க்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் திங்கள் முதல் ஆரம்பிக்கப்படும் என்றார்.

கொவிட் செயலணி கூட்டத்தில் இதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் இதற்கு அனுமதியளிக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20