நான் மது விருந்துகளில் பங்கேற்க மாட்டேன். குடிப்பழக்கமும் எனக்கு கிடையாது என்று நடிகை சோனம்கபூர் கூறியுள்ளார். 

பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இவர் நடிகர் அனில்கபூரின் மகள் ஆவார். ராஞ்சனா இந்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

இந்தி நடிகைகள் பலர் நட்சத்திர ஹோட்டல்களில் நடக்கும் மது விருந்துகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சோனம் கபூரிடமும் மது விருந்துகளில் பங்கேற்பீர்களா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:

“நான் மதுபானங்களை தொட்டதே இல்லை. அந்த பழக்கமே எனக்கு கிடையாது. அதை நினைத்துக்கூட பார்க்க மாட்டேன். இதனால் மது விருந்துகளில் கலந்து கொள்வது இல்லை. அவற்றை புறக்கணித்து விடுவேன். சினிமா துறையில் இருக்கும் யாரையும் இதுவரை காதலிக்கவும் இல்லை. இரவு நேரங்களில் புத்தகம் கையுமாகத்தான் இருப்பேன். எனது படுக்கையில் புத்தகங்கள் இருக்கும். தூக்கம் வராதபோது அந்த புத்தகங்களைத்தான் படிப்பேன்.

நிறைய பாதுகாவலர்களுடன் நான் வருவதாக விமர்சிக்கப்படுகிறது. சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என் சொந்த வாழ்க்கை பற்றிய எல்லா விஷயங்களும் அவர்களுக்கு தெரியும். பாதுகாவலர்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. எனது தேவைகளை அவர்கள் கவனித்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் என்னிடம் நெருங்காமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

பிரபலங்கள் எது செய்தாலும் விளம்பரமாகி விடுகிறது. இந்த நிலையில் பாதுகாவலர்கள் என்னை சுற்றி இருப்பது அவசியம். அவர்கள் எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான விஷயங்கள் வெளியே போகாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.”

இவ்வாறு சோனம் கபூர் கூறினார்.