விவசாயிகளின் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பு - ஜனாதிபதி

Published By: Gayathri

22 Oct, 2021 | 01:14 PM
image

(எம்.மனோசித்ரா)

விவசாயிகள் முகங்கொடுக்கும் அசௌகரிங்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம், எதிர்பார்க்கும் இலக்கை நோக்கிப் பயணிக்க முடியும். 

விவசாயிகளைச் சந்தித்து விடயங்களைத் தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினையை அடையாளங்கண்டு, அது தொடர்பாக அரசாங்கத்தை அறிவுறுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கமநலச் சேவைகள் உத்தியோகத்தர்களுடன் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

விவசாயிகள் முகங்கொடுக்கும் அசௌகரிங்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், எதிர்பார்க்கும் இலக்கை நோக்கிப் பயணிக்க முடியும். விவசாயிகளைச் சந்தித்து விடயங்களைத் தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியமாகும்.

சுற்றாடலையும் பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பதுடன், அதிக இலாபத்தை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும். 

ஒரு போகம், இரு போகத்துக்கு மாத்திரமன்றி, பல சந்ததியினர் பயன்பெறச் செய்வதே பசுமை விவசாயத்தின் இலக்காகும்.

விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினையை அடையாளங்கண்டு, அது தொடர்பாக அரசாங்கத்தை அறிவுறுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும். அவ்வாறு அறிவுறுத்தப்பட்டால் தான் அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

தவறான விடயம் ஒன்றை செய்யுமாறு தான் எவரிடமும் எப்போதும் கூறமாட்டேன். பசுமை விவசாயத்தில் ஈடுபடுவதால், பயிரிடப்படும் நில அளவை குறைக்க இடமளிக்க முடியாது. 

சேதனப் பசளையைப் பயன்பாட்டுடன்  முன்னோக்கிப் பயணிப்பதற்கான விவசாயிகளை ஊக்கப்படுத்துவது, நாட்டுக்கான அனைவரதும் பொறுப்பாகும்.

உலகம் ஏற்றுக்கொண்டுள்ள உயர் சுற்றாடல் பாதுகாப்புடன் கூடிய உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, நைட்ரஜன் உரத்துடன் திரவ நைட்ரஜனைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. 

நெனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட இந்தத் திரவ உரத்தில் உள்ள நைட்ரஜன் கூறு, இலைகளின் மூலம் நேரடியாக உள்ளீர்க்கப்படும். 

அந்தத் திரவம் நைட்ரஜனை எதிர்காலத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட கமநலச் சேவை உத்தியோகத்தர்கள்,

விளைச்சல் குறைவடைதல் தொடர்பாக விவசாயிகளுக்குத் தேவையற்ற அச்ச நிலை ஏற்பட்டிருப்பதோடு, உரிய நேரத்துக்கு உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலமும் சரியான தெளிவூட்டல்களை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதன் மூலமும், விவசாயிகளுக்குள் இருக்கும் பயம் மற்றும் பின்வாங்கும் தன்மையை நிவர்த்தி செய்துகொள்ள முடியும்.  

விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற சேதனப் பசளையின் தரம் மற்றும் சிறப்பு தன்மையை பரீட்சிக்கும் வசதிகள் போதுமான அளவில் இல்லை என்பதால், அவ்வசதிகளை விரிவுபடுத்தித் தர வேண்டும்.

விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள ஊக்கக் கொடுப்பனவுகள், அடிப்படைக் கொடுப்பனவுகள் என்பன தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. 

எதிர்கால போகங்களின்போது, சேதனப் பசளை உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காகத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26