' நனோ நைட்ரஜன் உரத்தால் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும்”

Published By: Gayathri

21 Oct, 2021 | 09:04 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

விவசாயிகளின் உரப்பிரசினைக்கு தீர்வு காணவே நவீன தொழிநுட்பத்தில் உருவாக்கப்படும் நனோ நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானித்ததாகவும், உரத்தின் தரம் குறித்த பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், உற்பத்தியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்வோம் என அரசாங்கம் தெரிவிக்கின்றது. 

நாட்டில் உணவுப்பஞ்சம் ஒருபோதும் ஏற்படாது. அதற்கு அரசாங்கம் இடம் வழங்காது என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சபையில் வாக்குறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 27/2 இன் கீழ் விசேட கூற்றொன்றை முன்வைத்து நாட்டின் தற்போதைய உரப் பிரச்சினை மற்றும் அரிசி இறக்குமதி குறித்து கேள்வி எழுப்பினார். 

இதற்கு அரசாங்கத்தின் பதிலை தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன  மற்றும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இது குறித்து கூறுகையில், 

இரசாயன பசளையை நிறுத்தி சேதன பசளையை பயன்படுத்த வேண்டும் என்ற ஜனாதிபதி எடுத்த தீர்மானம் வரவேற்கத்தக்கது.

அதேபோல் சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை  உரிமையாளர்களை நாம் எக்காரணம் கொண்டும் நெருக்கடிக்குள் தள்ளவில்லை. 

அவர்களின் ஒத்துழைப்பே அதிகளவில் கிடைக்கின்றது. ஆனால் இவர்களுக்கான பிரச்சினை இன்று நேற்று உருவான ஒன்றல்ல. அவர்களின் கடன்கள் மற்றும் வேறு பிரச்சினைகள் குறித்து தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளோம். 

இவர்களில் அரைவாசிப்பேர் கடன் நெருக்கடிகளில் உள்ளனர். 8.9 பில்லியன் ரூபா கடன்களை இவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர். 

இது இந்த அரசாங்கத்தில் பெறப்பட்ட கடன் அல்ல. இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தே இந்தக் கடன்கள் பெறப்பட்டுள்ளன. கடன் பிரச்சினையை தீர்க்க நாம் நடவடிக்கை எடுத்தபோதும் அதற்கு தீர்வுக்காண முடியாது போயுள்ளது.

இந்தக் கடன்கள் அநாவசியமானவை அல்ல. கடந்த ஆட்சிக்காலத்தில் நெல் பெற்றுக்கொள்வதற்காகவே கடன் கடன்பெறப்பட்டது. ஆனால் அவற்றை சந்தைக்கு வழங்க முடியாது போனமையே இந்தக் கடன்களுக்கு காரணமாகும். 

ஆகவே இந்த கடன்களை நீக்கி அவர்களை பலப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதேபோல் சலுகைகளை பெற்றுக்கொடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை இப்போதே நாம் முன்னெடுத்துள்ளோம். விவசாயிகளின் கடன்களுக்கான சலுகைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் அரிசி இறக்குமதி செய்யவில்லை. ஆகவே கடந்த ஆண்டு சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை  உரிமையாளர்கள் பாதுகாக்கப்பட்டனர். இன்று பிரதான  நெல் உரிமையாளர்களின் நெல் தரத்தில் கூடியது. 

ஆனால் சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை  உரிமையாளர்களின் அரிசி தரம் சிறந்ததாக இல்லை. இதற்கு முறையான சிறந்த இயந்திரங்கள்  மற்றும் ஆலைகள் இல்லை என்பதே காரணமாகும். 

ஆகவே அரசாங்கத்தால் புதிதாக ஐந்து ஆலைகளை உருவாக்கி சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை  உரிமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சந்தையில் அரிசி விலை அதிகரிப்பு உள்ளதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். தேசிய உற்பத்தியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அதேபோல் நுகர்வோருக்கும் பாதிக்காத வகையில் அரசாங்கம் இது குறித்த நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இது தொடர்பில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சபையில் கூறுகையில்,

நெல் ஒரு கிலோவிற்கு விவசாயிக்கும் சிறந்த விலை கிடைக்கின்றது. ஆகவே விவசாயிகள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர். 30 ரூபாவிற்கு ஒரு கிலோ நெல் வாங்கிய சூழ்நிலையில்  இப்போது 70 ரூபா அளவில் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. 

அதேபோல் உரப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே. ஆனால் அதற்கும் தீர்வுகளை நாம் வழங்கி வருகின்றோம். 

நாம் இறக்குமதி செய்துள்ள நனோ நைட்ரஜன் உரம் தரத்தில் கூடியது. இது உலகத்தின் புதிய தொழிநுட்ப உரமாகும். நனோ நைட்ரஜன் உரம் முழுமையாக இறக்குமதி செய்யப்படும். 

30 ஆம் திகதிக்கு முன்னர் விவசாயிகளுக்காக இந்த உரங்கள் இறக்குமதி செய்யப்படும். உரத்தின் தரம் குறித்த பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

உற்பத்தியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். 

ஆனால் நாட்டில் உணவுப்பஞ்சம் ஒருபோதும் ஏற்படாது. அதற்கு அரசாங்கம் இடம் வழங்காது.

நாட்டின் தேசிய உற்பத்தியில் இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியே தேவைப்படும். அதில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏதேனும் ஒரு விதத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். 

நாம் எடுக்கும் முயற்சிகளில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் பிரச்சினைகளை நாம் சரியாக கையாள்வோம். சரியான நேரத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படும்.

அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்று, ஏதேனும் சிக்கல்கள் விவசாயிகளுக்கு ஏற்பட்டால் முறையான நட்டஈடு வழங்கப்படும்.  

நெல் இறக்குமதி செய்ய நாம் தயாராக இருக்கவில்லை. ஆனால் விவசாயிகள் நெல்லை வழங்காது மறைத்தனர். ஆகவே நுகர்வோரை பட்டினியில் போட முடியாது. எனவேதான் மாற்று வழிமுறை ஏதுமில்லாது அரிசியை இறக்குமதி செய்ய நேர்ந்தது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08