இளையோர் கிரிக்கெட் : பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடர் இலங்கை வசம்

Published By: Digital Desk 2

21 Oct, 2021 | 05:45 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

ஷெவோன் டேனியல் மற்றும் வனூஜ சஹன் ஆகியோரின் பொறுப்பான துடுப்பாட்டத்தினால் 19 வயதுக்குபட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான 3 ஆவது இளையயோர் சர்வதேச ஒருநாள் போட்டியை 3 விக்கெட்டுக்களால் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வெற்றியீட்டியது. 

இந்த வெற்றின் மூலமாக  இவ்விரண்டு அணிகளுக்கி‍டையிலான 5 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் தொடரை இலங்கை அணி 2 போட்டிகள் எஞ்சிய நிலையில்  3க்கு 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மற்றும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட இளையோர்  சர்வதேச போட்டித் தொடரின் 3 ஆவது போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது. ஒரு கட்டத்தில்   71  ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்கள் இழந்து தடுமாறிய பங்களா‍தேஷ் அணிக்கு,அவ்வணியின் கடைநிலை வீரர்கள் சிறப்பான இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தனர். 

அவ்வணியின் கடைநிலை வீரர்களான அஷொன் அபிப் (33),நைமுர் ரொஹ்மன்(27) சிறப்பான பங்களிப்பை ஆற்றியதுடன், 9 ஆம் இலக்க வீரராக களமிறங்கிய அசிக்குர் ஸமான் ஆட்டமிழக்காது அரைச்சதம் (54) அடித்தார்.

பந்துவீச்சில் இலங்கை சார்பாக வினூஜ ரண்புல், ரவீன் டி சில்வா இருவரும் தலா 3 விக்கெட்டுக்களையும், வனூஜ சஹன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

185 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 14 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்‍கெட்டுக்களையும் இழந்து தடுமாறியது. இருப்பினும் 3 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஷெவோன் டேனியல் மற்றும் பவன் பத்திராஜ நிதானமாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

இந்த ஜோடி தமக்கிடையில் 75 ஓட்டங்களை பகிர்ந்திருந்தவேளையில், பவன் பத்திராஜ 31 ஓட்டங்களுடன் ஆட்மிழந்தார். 89 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்த இலங்கயின் அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேற 96 ஓட்டங்களுக்கு 6 என சரிவை எதிர்கொண்டது.

எனினும்,ஷெவோன் டேனியல் முறுமுனையில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார். இவருடன் 7 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த வினூஜ ரண்புல் நிதானமாக துடுப்பெடுத்தாடி ‍பெறுமதிமிக்க 10 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

இந்த ஜோடி தமக்கிடையில் 26 ஓட்டங்களை பகிர்ந்தது. இதையடுத்து 8 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஷெவோன் மற்றும் வனூஜ சஹான் பிரிக்கப்படாத 66 ஓட்டங்களை பகிர்ந்து வெற்றி 46.4 ஓவர்களில் 7விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை எட்டியது. ‍ஷெவோன் டேனியல் 117 பந்துகளில் ஒரு சிக்ஸர் 7 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களையும், வனூஜ சஹான் 53 பந்துகளில் 2 பவுண்டரிகள் அடங்கலாக ‍பெறுமதிமிக்க 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் முஷ்பிக் ஹசன் 3 விக்கெடடுக்களையும்,  அஷொன் அபிப் 2 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலமாக 5 போட்டிகள் கொண்ட தொடரை 2 போட்டிகள் எஞ்சிய நிலையில் 19 வயதுக்குட்டபட்ட இலங்கை அணி  கைப்பற்றியதுடன், இவ்விரு ‍ அணிகளுக்கிடையிலான 4 ஆவது போட்டி மற்றும் 5 ஆவது போட்டி ஆகியன முறையே எதிர்வரும் 23 ஆம், 25 ஆம் திகதிகளில் இதே மைதானத்தில் நடைபெறும்.

போட்டிச் சுருக்கம்

19 வயதுக்குட்பட்ட பங்களா‍தேஷ் அணி - 184/10 (49.3)                                                                                                                              

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி - 188/7 (46.4)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07