நனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் - சஜித் பிரேமதாச

Published By: Digital Desk 3

21 Oct, 2021 | 02:20 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்  நனோ நைட்ரஜன் திரவ உரம் எமது நாட்டு விவசாய பூமிக்கு உகந்ததா என்பது தாெடர்பில் ஆராய்ந்தா அரசாங்கம் இதனை இறக்குமதி செய்திருக்கின்றது. அத்துடன் இந்த உரம் தொடர்பில் விவசாய ஆராய்ச்சி நிபுணர்களின் நிலைப்பாட்டை பெற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நிலையியற்கட்டளை 27/2இன் கீழ் நாட்டில் ஏற்பட்டிருக்கும் உரம் பிரச்சினைக்கு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரிசி விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட தூரநோக்கற்ற வேலைத்திட்டத்தினால் சிறிய மற்றும் மத்திய அரிசி ஆலை தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நாட்டுக்கு அரிசி விநியோகிக்கின்ற அரிசி ஆலை உரிமையாளர்களில் 65 வீதமானவை சிறிய மற்றும் மத்திய அரிசி ஆலை உரிமையாளர்களே விநியோகிக்கின்றன.

இவ்வாறு மொத்தமாக 850 ஆலை உரிமையாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கின்றனர் என்பதை அரசாங்கத்துக்கு தெரியுமா என கேட்கின்றேன்.

அதேபோன்று அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அவசரகால நிலைமையை பயன்படுத்தி, அரிசி களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து, நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தோல்வியடைந்திருக்கின்றது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா? அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்குமா?.

மேலும் உரம் பிரச்சினையால் அரசாங்கம் தற்போது நனோ நைட்ரஜன் திரவ உரம் கொண்டுவர தீர்மானித்திருக்கின்றது. இந்த உரம் தொடர்பில் விவசாயிகள் மத்தியில் தெளிவில்லாமல் இருக்கின்றது. அதேபோன்று இந்த உரம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக விவசாய ஆராய்ச்சி நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். 

இந்த விடயம் தொடர்பாக அவர்களையும் இணைத்துக்கொண்டு அரசாங்கம் தீர்மானிக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் இந்தியாவில் நனோ நைட்ரஜன் திரவ உரம் தயாரித்து இரண்டு மாதங்களே ஆகின்றன. அதனால் இந்த உரம் தொடர்பான ஆராேக்கியத்தன்மை தொடர்பில் இந்திய விவசாயிகளுக்கும் சரியான தெளிவு இல்லை. அதனால் எமது விவசாய பூமிக்கு இந்த உரம் எந்தளவுக்கு பயன் அளிக்கும் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது என விவசாயம் தொடர்பான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியாயின் அரசாங்கம் எந்த அடிப்படையில் நனோ நைட்ரஜன் திரவ உரம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றது?

அதேபோன்று இரசாயன உரத்தை தடைசெய்துள்ள அரசாங்கம் தற்போது அரிசி இறக்குமதி செய்துவருகின்றது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசி சேதன பசளையில் உற்பத்தி செய்யப்பட்டதா என்பதை ஆய்வு செய்தா அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்ய தீர்மானித்திருக்கின்றது என்பதை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11