பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்­சே­காவின் பிர­தேச அபி­வி­ருத்தி அமைச்­சுக்­கான 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா குறை­நி­ரப்பு நிதி ஒதுக்­கீடு செய்­வ­தற்கு பாரா­ளு­மன்றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று  பிரதேச அபி­வி­ருத்தி அமைச்­ச­ரான பீல்ட் மார்ஷல் சரத் ­பொன்­சேகா தனது அமைச்­சுக்கு 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா­வுக்­கான குறை நிரப்பு பிரே­ர­ணையை சமர்ப்­பித்தார். இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற விவா­தங்­களை தொடர்ந்து இத்­தொ­கையை ஒதுக்கீடு செய்வதற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.