இலங்கை பற்றிய உலகத் தலைவர்களின் சாதகமான நிலைப்பாடு தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் : ஜனாதிபதி

Published By: Robert

21 Sep, 2016 | 09:35 AM
image

இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றுக்காக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக இன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது உலகத் தலைவர்களுக்கு எடுத்துரைக்க இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

நியூயோர்க் Loews Regency ஹோட்டலில் நேற்று மாலை இலங்கை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பிரேசில் ஜனாதிபதி இன்று பொதுச்சபையில் உரையாற்றும்போது தெரிவித்ததைப்போன்று, சட்டவிரோதமான போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் தொடர்பில் கூடிய அவதானத்தை செலுத்தவுள்ளதுடன் தான் முன்னெடுத்துவரும் போதைப்பொருளுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பிலும் பொதுச்சபையில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனினால்; ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன நிகழ்விலும் கலந்துகொண்ட ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட பல தலைவர்களுடன கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இலங்கையில் தெளிவான மாற்றம் ஒன்று தென்படுகின்றது என ஜனாதிபதி ஒபாமா இதன்போது தெரிவித்தார். அதேவேளை பான் கீ மூன், இலங்கையின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் தன்னிடம் வாழ்த்துத் தெரிவித்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கை தொடர்பில் எல்லோருமே பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு அவர்களுடைய இந்த சாதகமான பிரதிபலிப்புக்கள் தொடர்பில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். 

தற்போது எந்தவொரு நாடும் இலங்கையுடன் வெறுப்புடனோ அல்லது பகைமையுணர்வுடனோ இல்லையெனவும் அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கூடிய சாதகமான நிலைப்பாட்டுடனேயே உள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, உலகத்தலைவர்களுடைய இந்த சாதகமான நிலைப்பாட்டை இலங்கைக்கு திரும்பிச் செல்லும்போது தான் எடுத்துச் செல்வேன் எனவும் மேலும் தெரிவித்தார். 

உலக வெப்பமயமாதல் தொடர்பான பாரிஸ் பிரகடனத்திற்கு பல நாடுகள் ஒப்புதல் அளித்தமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைந்திருந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும், பொருளாதார ரீதியில் பலம்மிக்க தேசமாக இலங்கையை மாற்றுவதற்கு முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி; தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04