நாட்டின் மின்கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படும்  - சம்பிக்க ஆரூடம்

Published By: Digital Desk 4

20 Oct, 2021 | 08:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

டிசம்பர் மாதத்திற்குள் மசகு எண்ணெயை நாட்டுக்கு கொண்டு வராவிட்டால்  சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும், 200 மெகாவாட் தரத்துடன் இயங்கும் மின்நலையங்களையும் மூட வேண்டிய நிலை ஏற்படும்.

உரிய காலத்தில் நிலக்கரி பெறாவிட்டால் நாட்டின் மின்கட்டமைப்பில் 40 சதவீத வீழ்ச்சி ஏற்படும். அவ்வாறு நிகழ்ந்தால்  12 மணித்தியால மின்துண்டிப்பை எதிர்க் கொள்ள நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Articles Tagged Under: சம்பிக்க ரணவக்க | Virakesari.lk

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக சந்தையில்  அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையேற்றத்தினால் தேசிய மட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது மக்களை ஏமாற்றும் கருத்தாக கருத வேண்டும். அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் உணவு பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்துள்ளது.

எவ்விதமான தூரநோக்க சிந்தனையுமில்லாமல் கடந்த ஏப்ரல் மாதம் இரசாயன உரம் பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்யப்பட்டது.இரசாயன உரத்திற்கு பதிலாக சேதன பசளை உரம் அறிமுகப்படுத்தப்பட்டது. சேதன பசளை திட்டம் கடந்த சிறுபோக விவசாயத்தில் தோல்வியடைந்தது.

உர பற்றாக்குறை காரணமாக  பூ உற்பத்தி, மரகறி,மற்றும் பழங்கள் உற்பத்தி,சிறு ஏற்றுமதி பயிர்கள் ஆகியவற்றின் உற்பத்திகள் முழுமையான வீழ்ச்சியடைந்தன.இதனால் சிறு ஏற்றுமதி உற்பத்தி ஊடாக அரசாங்கத்திற்கு கிடைக்கும் 1300 மில்லியன் அமெரிக்க டொலர் இல்லாமல் போனது

மறுபுறம் இரசாயன உரம் தடை செய்தமையினால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 40 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.

இதனால் இலங்கையின் தேசியைக்கான 'சிலோன் டீ ' என்ற வர்த்தக நாமமும் சீனாவிற்கு செல்லும் நிலை ஏற்படும். மறுபுறம்  கறுவாப்பட்டை உற்பத்திக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெரும் போக விவசாய காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்படாமல் உர பற்றாக்குறையை முன்னிலைப்படுத்தி வீதிக்கிறங்கி போராடுகிறார்கள்.

சிறுபோகத்தை போன்று பெருபோகமும் இம்முறை பயனற்றதாக அமையும். பெரும்போக விவசாயத்தின் ஊடாக மூன்றில் இரண்டு பங்கு நெல் விளைச்சல் கிடைக்கப் பெறும்.

இம்முறை பெரும்போகத்தில் சிறந்த நெல் விளைச்சலை எதிர்பார்க்க முடியாது.நெல் விளைச்சல் குறைவடைந்தால் அரிசி இறக்குமதி செய்ய நேரிடும்.அரிசி இறக்குமதிக்கு அரசாங்கத்திடம் டொலர் கிடையாது.

அவ்வாறாயின் நாட்டில் உணவு பற்றாக்குறை குறை ஏற்படும்.கொவிட் பெருந்தொற்று தாக்கம் செலுத்தியுள்ள நிலையில் உலக நாடுகள் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ள நிலையில் அரசாங்கம் தேசிய உற்பத்திகளை சவாலுக்குப்படுத்தியுள்ளது.

மறுபுறம் அரசாங்கம் எவ்வித வரையறைகளுமில்லாமல் நாணயம் அச்சிடுகிறது.2019ஆம் ஆண்டு 29 பில்லியன் நாணயம் மாத்திரம் அச்சிடப்பட்டது.

ஆனால் தற்போதைய அரசாங்கம் கடந்த இரண்டு வருட காலத்திற்குள் மாத்திரம் 1300 பில்லியன் நிதி அச்சிட்டுள்ளது.

நாட்டின் உற்பத்திகள் குறைவடைந்துள்ள நிலையில் வரையறையில்லாமல் அச்சிட்டுள்ளதும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு காரணிகளாக அமைகின்றன.

எரிபொருளை பெற்றுக் கொள்வதில் அரசாங்கம் பெரும் நெருக்கடியை எதிர்க் கொண்டுள்ளது. எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் மசகு எண்ணெய் தேவையான அளவு பெற்றுக் கொள்ளாவிட்டால் நுரைச்சோலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும்,200 மெகாவாட் மின்னுற்பத்தி தரத்திலான மின்நிலையங்களையும் மூட வேண்டிய நிலை ஏற்படும்.உரிய காலத்தில் நிலக்கரி பெறாவிட்டால் நாட்டின் மின்கட்டமைப்பில் 40சதவீத வீழ்ச்சி ஏற்படும்.அவ்வாறு நிகழ்ந்தால்  12 மணித்தியால மின்துண்டிப்பிற்கு மக்கள் முகம் கொடுக்க நேரிடும்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02