நாட்டைக் கட்டியெழுப்ப நாம் தயார் ! கொள்கையும் வேலைத்திட்டமும் ஐக்கிய தேசியக் கட்சியிடமே உள்ளது - ரணில்

Published By: Digital Desk 4

20 Oct, 2021 | 08:54 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டமும் கொள்கையும் ஐக்கிய தேசிய கட்சியிடமே இருக்கின்றது. எதிர்கால வேலைத்திட்டத்தை முன்வைத்தே நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். மக்கள் அன்று எம்மை நிராகரித்தனர். ஆனால் இன்று மக்கள் உணர்கின்றனர். 

அதனால் அடுத்துவரும் 20 வருடங்களில் நாட்டை ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த படியாக கொண்டுசெல்வதா அல்லது

ஜப்பானுக்கு அடுத்த இடத்துக்கு கொண்டுசெல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை மேன்படுத்தும் வேலைத்திட்டம் புதன்கிழமை (20 ) மாலை  கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாளைய தினம் தொடர்பாக சிந்தித்து, நாளைய தினத்தை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டவர்களே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள்.டி.எஸ்., சேனாநாயக்க, ஜோன் கொத்தலாவல, ஜே,ஆர். ஜயவர்த்தன, ரணசிங்க பிரேமதாச போன்ற தலைவர்கள் நாட்டின் நாளைய தினத்தை சிந்தித்து, விவசாயம், கொத்தலாவல பலக்கலைக்கழகம், மகாவலி திட்டம். ஆடைத்தொழிற்சாலை என்பனவற்றை முன்னெடுத்தார்கள். அந்த வேலைத்திட்டங்கள் வெற்றியடைந்தன.

அதேபோன்று நாங்களும் நாளைய தினத்தை சிந்தித்து கடந்த அரசாங்கத்தில் சுவசெரியவை ஆரம்பித்தோம். மாணவர்களுக்கு டெப் கணணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

நாங்கள் நாளைய தினத்தை சிந்தித்து செயற்பட்டாலும் சிலர் அவ்வாறு சிந்திக்கவில்லை. இந்த வேலைத்திட்டங்களை அரசாங்கத்துக்கு உள்ளே இருந்தவர்களும் வெளியியில் இருந்தவர்களும் எதிர்த்தார்கள். மாணவர்களுக்கு டெப் வழகங்கினால் மலட்டுப்பதன்மை ஏற்படும் என்றார்கள்.

ஆனால் இன்று மாணவர்களின் கல்வியே மலடாகி இருக்கின்றது. டெப் வழங்கி இருந்தால் இந்த நிலைக்கு மாணவர்களின் கல்வி வீழ்ச்சியடைந்திருக்காது.

மேலும் நாங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு சென்றோம். அதில் எமது கொள்கையை முன்வைத்தோம். ஏனையவர்களைப்போன்று வாக்குறுதிகளை வழங்கவில்லை. கொவிட் தொற்று தொடர்பாக குறிப்பிட்டோம். உலக பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என தெரிவித்தாேம்.

அதற்கு முகம்கொடுக்கவேண்டி வேலைத்திட்டங்களை தெரிவித்தோம். ஆனால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் எங்களை நிராகரித்தனர். ஆனால்  அன்று நாங்கள் தெரிவித்த விடயங்கள் சரி என தற்போது மக்கள் உணருகின்றனர். அதனால் நாளைய தினமும் நாட்டை கட்டியெழுப்ப முடியுமாக இருப்பது ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமாகும். அதற்கான கொள்கையும் வேலைத்திட்டமும் எங்களிடமே இருக்கின்றது.

அத்துடன் 5வருடத்துக்கு ஒருமுறை ஆட்சியில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது. 20வருடங்களாவது தொடர்ந்து ஆட்சியில் இருக்கவேண்டும்.

ஜே,ஆர். 17வருடங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்து முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் காரணமாகவே நாங்கள் இன்றையக்கு கொஞ்சமேனும் தலைநிமிர்ந்து நிட்க முடியுமாகி இருக்கின்றது. அதனால் 20வருட ஆட்சிக்கு செல்லவேண்டும். கட்சி மாறலாம், ஆனால் கொள்கை மாறக்கூடாது. அதனை பாதுகாக்க சட்டரீதியிலான சட்ட வரைபொன்றை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

மேலும் நாட்டை கட்டியெழுப்ப முதலாவதாக சுகாதார பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டு, கொவிட் தொற்றுடன் நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்லவேண்டும்.

அடுத்தபடியாக பொருளாதார பாதுகாப்பு தேவை. நவீன பொருளாதார திட்டங்களுக்கு முகம்கொடுப்பதற்கு தேவையான கல்வி பாதுகாப்பை கொடுக்கவேண்டும். அதற்கு ஏற்றவகையில் சூழல் பாதுகாப்பை ஏற்படுத்தவேண்டும். இந்த அடிப்படையில் முன்னுக்கு சென்றால் நாட்டின் 100ஆவது வருடத்துக்கு முன்னர் நாங்கள் முன்னேற்றமடைந்த நாடாக மாறுவோம்.

அதனால் அடுத்துவரும் 20வருடத்தில் நாங்கள் ஆப்கானிஸ்தானுக்கு பின்னால் இருப்பதா அல்லது ஜப்பானுக்கு அடுத்தபடியாக இருப்பதா என்பதை தீர்மானிக்கவேண்டும். நாட்டை கட்டியெழுப்ப ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கின்றது. அதற்காக இளம் தலைவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17