மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படமாட்டாது

Published By: Digital Desk 3

19 Oct, 2021 | 07:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை நாளை ஆரம்பிக்கப்படமாட்டாது.

புகையிரத சேவையை மீள ஆரம்பிக்கும் திகதியும், புகையிரத சேவையை தொடர்ந்து ஆரம்பிக்காமல் இருப்பதற்கான உரிய காரணமும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுமார் 2 மாத காலத்திற்கு பிறகு பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையினை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 120  புகையிரத பயணங்களை தினசரி சேவையில் ஈடுப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையில புகையிரத சேவையாளர்களை சேவைக்கு அழைக்க வேண்டாம் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதில் 21 ஆம் திகதி பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்கும் தீர்மானம் திகதி குறிப்பிடாமல் பிற்போடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

புகையிரத போக்குவரத்து சேவையை தொடர்ந்து முடக்கி வைப்பதற்கான உரிய காரணம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கருத்திற் கொண்டு புகையிரத பயணங்களை அதிகரிக்கும் வகையில் புகையிரத திணைக்களம் புகையிரத பயண சேவை அட்டவணையை திருத்தியமைத்தது.

மாகாணங்களுக்குள் மாத்திரம் பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையினை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய  ஆரம்பிக்க கோரியுள்ளோம்.

புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46