மலைநாட்டு திருமணம் / திருமண முறிவு சட்டத்தை திருத்தம் செய்ய அனுமதி

Published By: Vishnu

19 Oct, 2021 | 11:59 AM
image

மலைநாட்டு திருமணம் மற்றும் திருமண முறிவு சட்டத்திற்கு ஏற்புடைய இசைவுகளை நீக்குவதற்கும், அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1997 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க திருமணப் பதிவு செய்தல் (திருத்தப்பட்ட சட்டம்) மூலம் திருமணப் பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரை திருத்தப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, சிறுவயதுத் திருமணங்களுக்கு பெற்றோரின் விருப்பு ஒப்புதல் அவசியமெனக் குறித்துரைக்கப்பட்டுள்ளது. 

குணரத்னம் எதிர் பதிவாளர் நாயகம் வழக்குத் தீர்ப்புக்கமைய 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு இலங்கையில் சட்டபூர்வ திருமணத்தைப் பதிவு செய்வதற்கு இயலாது. அவ்வாறான திருமணத்திற்கு பெற்றாரின் விருப்பு ஒப்புதல் இருத்தல் சட்டத்தின் முன் செல்லுபடியற்றது. 

குறித்த வழக்குத் தீர்ப்புக்கமைய தகுதி வாய்ந்த அதிகாரம் படைத்தவர் ஒருவருடைய உடன்பாட்டுடன் சிறுவயதுக்காரர்களின் திருமணத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களுக்கு ஏற்புடைய உறுப்புரைகளை முடிவுறுத்த வேண்டியுள்ளது. 

அதற்கமைய, தற்போது முஸ்லிம் திருமண மற்றும் திருமண முறிவு சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு இணையாக மலைநாட்டு திருமணம் மற்றும் திருமண முறிவு சட்டத்திற்கு ஏற்புடைய இசைவுகளை நீக்குவதற்கும், அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46