எதிர்க் கட்சித்தலைவர் ஏன் கிளிநொச்சி சந்தைக்கு வரவில்லை :  பத்தரமுல்லை சீலரத்தின தேரர்  கேள்வி

Published By: Ponmalar

20 Sep, 2016 | 06:55 PM
image

(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட எதிர்க் கட்சித்தலைவர் ஏன் சந்தை தொகுதிக்கு வரவில்லை என பத்தரமுல்லை சீலரத்தின தேரர்  கேள்வி கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று கிளிநொச்சி சந்தைத்தொகுதியில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உலருணவு பொருட்களை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 

நான், இனவாதம் பேசவில்லை. பாதிக்கப்பட்ட உங்களின் நிலை தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வருவேன். உங்களுக்கு உதவி செய்யுமாறு பேசுவேன். நாம் அனைவரும் ஒரு நாட்டை சேர்ந்தவர்கள், இனவாதம் பேசவேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஆனால், உங்களது வாக்குகளால் மக்கள் பிரதிநிதிகளாக்கப்பட்டவர்கள் உங்களுக்கு உதவ வேண்டும். டக்ளஸ் தேவானந்தா, உங்கள் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்றவர். அவர் உங்களை இன்று வரை சந்திக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர், தமக்கு எதிர்க்கட்சி தலைமை பதவி வழங்கப்படவில்லை என்று இனவாதம் பேசினார். இன்று பதவி கிடைத்தவுடன் அமைதியாக இருக்கின்றார். அவரும் இன்று வரை உங்களை வந்து சந்திக்கவில்லை.

இன்று அரசியலில் உள்ளவர்களின் உறவினர்கள் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களா? யாருடைய உறவினராவது யுத்தத்தில் உயிரிழந்துள்ளார்களா? அக்காலத்தில் அரசியல்வாதிகள், சுகபோக வாழ்க்கையை அனுபவித்தார்கள். இன்று யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த நீங்கள் இன்று மீண்டும் இழப்பினை சந்தித்துள்ளீர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44