மருந்துகளின் விலைகளை குறைக்க  நடவடிக்கை எடுக்கவேண்டும்  

Published By: Ponmalar

20 Sep, 2016 | 06:43 PM
image

(பா.ருத்ரகுமார்)

மருந்துகளின் விலையை குறைக்க சுகாதார அமைச்சு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பில் குறித்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரச வைத்தியசாலைகளில் மருந்துப்பொருட்கள் தாராளமாக காணப்படுகின்ற போதும் தனியார்த் துறையை பொறுத்தமட்டில் மருந்துகளின் விலை முறையாக நிர்ணயிக்கப்படாமையினால்   தங்களுக்கு ஏற்றாற்போல் மருந்து விலையை உயர்த்துகின்றனர். இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.                                 

இதனடிப்படையில் புதிய தேசிய மருந்துக் கொள்கையை செயற்படுத்துவதன் மூலம் தரமான மருந்துகளை குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ள முடியுமாக உள்ள போதும் அதனை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கு பின்வாங்குகின்றது. அத்தோடு மக்கள் தரமான மருந்துப்பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்துடன் தனியார்த்துறையை நாடுகின்றமையினாலேயே குறிப்பிட்ட விலை நிர்ணயத்துக்கு செல்ல முடியவில்லை.

அரச மருந்தகங்களில் உள்ள மருந்துகள் மற்றும் சிகிச்சைகளில் மக்கள் நம்பிக்கை  கொண்டிருக்க வேண்டும். அத்தோடு சந்தையில் விற்கப்படும் போலியான மருந்து மற்றும் மாபியா கும்பல்களை இணங்கான வேண்டும்.  இதன்மூலமே மருந்துகளின் விலையை குறைக்க முடியும். மேலும், அவ்வாறு குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ளப்படும் மருந்துகளின் தரத்தை பரிசோதிக்க உரிய பொறிமுறை வெளியிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:38:19
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02