பொது மக்களிடம் பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு !

Published By: Gayathri

18 Oct, 2021 | 08:48 PM
image

(எம்.மனோசித்ரா)

விடுமுறை தினங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

எதிர்வரும் வாரங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதால் இவ்வாறான விடயங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை கண்காணிப்பதற்காக மேல் மாகாண எல்லைகள் 13 இல் 115 பொலிஸ் உத்தியோகத்தர்களும், 81 இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

அதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்ட 976 வாகனங்களும், 1439 பேரும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். 

இதேபோன்று மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 931 வாகனங்களும், 1710 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதன்போது உரிய அனுமதி இன்றி பயணிக்க முற்பட்ட 415 நபர்களும், 208 வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன. 

விடுமுறை தினங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் ஒன்றுக்கூடும் நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எதிர்வரும் வாரங்கள் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான தயார்படுத்தல்கள் இடம்பெறும் வாரங்கள் ஆகும். 

எனவே தற்போதைய விடுமுறை காலத்தில் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருடன் போக்குவரத்துக்களை மேற்கொண்டால் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே விடுமுறை நாட்களில் எங்கும் செல்லாது வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17