மாகாணசபை தேர்தலில் தனித்தா ? கூட்டணியா ? - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீவிரமாக ஆய்வு

Published By: Digital Desk 3

18 Oct, 2021 | 05:44 PM
image

(ஆர்.யசி)

நாட்டின் அத்தியாவசிய செயற்பாடுகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் குறித்து ஆளுங்கட்சியின் பிரதான பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திற்குள் கடுமையான முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக ஆளுந்தரப்பு அமைச்சர்கள் மூலமாக தெரிய வருவதுடன், எதிர்வரும் மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் கூட்டணியாக களமிறங்குவது குறித்தி கட்சிக்குள் பெரும்பான்மை ஆதரவு உள்ளதாகவும், அது குறித்து தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூலமாக அறிய முடிந்துள்ளது. 

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, உர பிரச்சினை மற்றும் நாட்டின் வளங்களை கையாள்வதில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட பங்காளிக்கட்சிகள் வெளிப்படையாக அரசாங்கத்தை விமர்சித்து வருகின்ற நிலையில் அரசாங்கத்திற்குள் பல முனை எதிர்ப்பு செயற்பாடுகள் எழுர்ச்சிபெற ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளை காணலாம் என்ற முயற்சிகளை முன்னெடுத்தாலும் கூட பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் பேசி முரண்பாடுகளை தீர்க்குமாறு ஜனாதிபதியும் தெரிவித்துள்ளார் என அறிய முடிகின்றது. 

இந்நிலையில் ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து தீர்மானம் எடுக்க ஆரம்பித்துள்ளது. இது குறித்து தொடர்ச்சியாக கட்சியின் மத்திய குழு கூடி ஆராய்வதுடன், கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் கீழ் மட்ட உறுப்பினர்களை ஒவ்வொரு பிரதேசங்களில் ஒன்றிணைத்து கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாகாணசபைகளுக்கான  தேர்தலில் தனித்து களமிறங்கவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஏனைய சில கட்சிகளை கூட்டணியாக அமைத்து மூன்றாம் அரசியல் அணியொன்றாக களமிறங்குவோம் என்ற யோசனையை கட்சிக்குள் முன்வைத்துள்ளார்களாம். இதற்கு கட்சியின் தலைமை உள்ளிட்ட கட்சியின் தீர்மானம் எடுக்கும் பிரதான தரப்பினரின இணக்கம் இருப்பதாகவும் எனினும் ஏனைய சகலருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கலாம் என ஒத்திவைத்துள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலமாக தெரிய  வந்துள்ளது.

இந்நிலையில் நிகழ்கால அரசியல் நகர்வுகள் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன கேசரிக்கு தெரிவிக்கையில்,

நாட்டின் நிகழ்கால அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள் குறித்தும் எம்மால் திருப்தியடைய முடியாதுள்ளது. நாட்டில் பல்வேறு மக்கள் கூட்டம் தமது அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்கள் தமக்கான நியாயம் கேட்டு போராடுகின்றனர், விவசாயிகள் உரம் தருமாறு கோரிக்கை முன்வைத்து  போராடுகின்றனர், மரக்கறி உற்பத்தியாளர்கள் தமது விளைச்சலுக்கு ஏற்ற நியாயமான விலை இல்லையென போராடுகின்றனர்,ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமக்கான கொடுப்பனவுகள் வேண்டுமென கேட்டு நிற்கின்றனர், மக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக அதிருப்தியுடன் செயற்பட்டுக்கொண்டுள்ளனர்.

ஆகவே அரசாங்கம் இது குறித்து கூடிய கவனம் செலுத்தியாக வேண்டும். நாமும் ஆளும் கட்சிக்குள் இருக்கும் முக்கிய பங்காளிக்கட்சியாக அரசாங்கத்திற்கு நிலைமைகளை எடுத்துக்கூறி வருகின்றோம். உடனடியாக சில தீர்மானங்களை அரசாங்கம் எடுக்க வேண்டும். மக்களுக்கு சுமை விளங்காத வகையில் அவை அமைய வேண்டும். அதேபோல் மாகாணசபைகள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்துள்ளோம்.

முன்னைய ஆட்சியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த நான் முயற்சிகளை எடுத்தும் ஏனையவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. எனினும் இப்போதும் எமது நிலைப்பாடு மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதாகும். மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எவ்வாறு போட்டியிடும் என்பது குறித்து கட்சிக்குள் ஆராயப்பட்டு வருகின்றது என்றார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, கட்சியின் செயற்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நாடு பூராகவுமிருந்து எழுந்துள்ளது.

இந்த நாட்டில் சரியான ஆட்சியை கொண்டு சென்றவர்கள் என்ற நம்பிக்கை இன்னமும் மக்கள் மத்தியில் உள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் இதே நிலைமையே உள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சார்ந்த கூட்டணியை உருவாக்கவே நாமும் முயற்சிக்கின்றோம்.அதேபோல் மாகாணசபை தேர்தலை தனித்து சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் உள்ளது, அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் சிலர் உள்ளனர்.

எனினும் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன என்பதையே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து விரைவில் தீர்மானம் எடுப்போம், ஆனால் கட்சியினதும் கட்சி ஆதரவாளர்களினதும் நிலைப்பாடு என்னவோ அதனையே நாம் முன்னெடுப்போம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59