எதிர்ப்பலைகளை  தடுத்தாடும் கலை

Published By: Digital Desk 2

18 Oct, 2021 | 03:10 PM
image

சிவலிங்கம்சிவகுமாரன்

 அத்தியாவசியபொருட்களின் நிர்ணய விலை கட்டுப்பாட்டை நீக்கியதால் கடந்த வாரம் பல உணவு பொருட்கள்உட்பட அதைச் சார்ந்த ஏனைய பொருட்களும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் விலைஅதிகரிப்பை கண்டிருந்தன. 

 நாட்டில்பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறுகிறார். மத்திய வங்கி ஆளுநரோ2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு கடன்களாக 11.6 பில்லியன் அமெரிக்க டொலர்களைசெலுத்தியுள்ளோம், கையிருப்பில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருக்கின்றன என்கிறார்.

 மட்டுமின்றி இந்த ஆண்டின்ஆரம்பத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 8 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போதுஇந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கு 5 சதவீதமாக எதிர்ப்பார்க்கப்படும் அதே வேளைஅடுத்த ஆண்டில் 6 இலிருந்து 6.5 சதவீத வளர்ச்சியை அடைய முடியும் என்கிறார்.

அத்தியாவசிய பொருட்களின்விலை அதிகரிப்பை எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை, ஆனால் வர்த்தகர்கள் முன்வைத்தவிலைபட்டியலை விட குறைந்த அளவில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவே அரசாங்கம் அனுமதியளித்துள்ளதுஎன வழமையான தனது சமாளிப்பு கதையை கூறுகிறார் வர்த்தக அமைச்சர் பந்துல.

 மறுபக்கம் வெள்ளைப்பூண்டு சர்ச்சையில் பல சதோச அதிகாரிகள்கைதாகி வருகின்றனர். இதற்கும் தனக்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லை என்று கூறி வரும்வர்த்தக அமைச்சர், உண்மையான கள்வர்களின் முகத்திரையை அகற்றுவதற்கு முன்னின்று செயற்பட்டால்மாத்திரமே நம்பப்படுவார். 

அரசாங்கத் தரப்பு அமைச்சர்கள்கூறும் விளக்கங்கள் ஒரு பக்கமிருக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவோ புதிய அரசியலமைப்புமற்றும் தேர்தல் முறைகள் பற்றியும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தனது கொள்கையை வலியுறுத்தும்வகையில் இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிகழ்வு பூர்த்தியின் போது உரையாற்றியிருந்தார்.

நாடு இப்போதிருக்கும் நிலைமையில்புதிய அரசியலமைப்போ அல்லது தேர்தல் முறை மாற்றங்களோ பொருளாதார நெருக்கடியை தீர்க்கப்போவதில்லை. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-17#page-27

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22