உலகைத் தூய்மையாக்குமா பன்டோரா பேப்பர்ஸ்?

Published By: Digital Desk 2

18 Oct, 2021 | 03:03 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை     

“வலியவன் ஆண்டு நலிந்தவன் ஒடுக்கப்படும் கறைபடிந்த உலகம் பற்றிய மாய யதார்த்தம்”     

            

உலகிற்கு ஊழல்கள் புதியவை அல்ல. அவை பொது வெளியில் அம்பலப்படுத்தப்படுவதும்தான். ஊழல் பற்றிய கரிசனை பெரும் அலையாக எழும். ஓரிடங்களில் நிகழும் மாற்றங்களைத் தவிரஅப்படியே ஓய்ந்து போகும். 

பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களை உலகம் மறந்திருக்க மாட்டாது. அவை அம்பலமாகிஐந்தாண்டுகள் கழிந்து விட்டன. அதனைத் தொடர்ந்து, பரடைஸ் பேப்பர்ஸ், ஃபின்சென் ஃபைல்ஸ்என்ற வரிசையில், இப்போது பன்டோரா பேப்பர்ஸ் வெளியாகியிருக்கின்றன.

உலகின் பணக்கார முதலைகள், கடல் கடந்து பெருந்தொகையை பதுக்கி வைத்தல் வழமை.எந்தெந்த முதலைகள் எங்கெங்கு, எப்படியெல்லாம் பதுக்கி வைத்திருக்கின்றன என்பதை அம்பலப்படுத்தும்முயற்சியென இவற்றை விபரிக்கலாம்.

உலகின் 117 நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் அயராத முயற்சியால்,ஒரு கோடிக்கு மேற்பட்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பணமுதலைகளையும், பதுக்கி வைத்தலையும்உலகறியச் செய்ததால், என்னவெல்லாம் நடந்திருக்கிறது?

ஊழல் புரிந்த அரசியல் தலைவர்கள், ஆட்சிபீடத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டிருக்கிறார்களா? உலகம் தூய்மையாகி விட்டிருக்கிறதா? ஜனநாயகம் தழைத்தோங்கி இருக்கிறதா?அப்படியெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை. மக்கள் விரக்தி அடைந்திருக்கிறார்கள். நிதி முறைமைகளில்உள்ள ஓட்டைகள் பற்றிய அயர்ச்சி உள்ளது. 

பனாமா பேப்பர்ஸ் ஊடாக மோல்ட்டா என்ற நாட்டின் அரசிலுள்ள பணமுதலைகளை டாப்னிகலீஸியா என்ற ஊடகவியலாளர் அம்பலப்படுத்தினார். சில நாட்களில் அவர் காருக்குள் வைத்துகொல்லப்பட்டிருந்தார். அந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.

மனசாட்சியுள்ள தேசம் என்றால், மோல்ட்டா தூய்மையானதாக மாறியிருக்க வேண்டும்.அம்பலப்படுத்தலுக்கு முன்னர் அந்நாடு எப்படி இருக்கிறதோ, அப்படியே தான் இன்னமும் இருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-17#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க

https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22