கிளிநொச்சி வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையம் திறப்பு

Published By: Gayathri

18 Oct, 2021 | 01:22 PM
image

கிளிநொச்சி வைத்தியசாலையில் 1.9 கோடி ரூபாவில்  இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையம் நேற்று (17.10.2021) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்ட வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் அதிகரித்துள்ள சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட இரத்த சுத்திகரிப்பு தேவையுடையவர்கள் இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அதிகரித்த போக்குவரத்து செலவுகள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில்  சென்று வந்த நிலைமை காணப்பட்டது.

இந்த இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையத்தின் மூலம் இவர்களுடைய பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  நிலவி வந்த இக் குறைப்பாட்டை கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகம் அவுஸ்திரேலிய மருத்துவ நலச் சங்கத்தின் நிதி அனுசரணையில் 1.9 கோடி ரூபா நிதிச் செலவில் 5 இரத்தச் சுத்திகரிப்பு இயந்திர தொகுதிகளை கொண்ட சிகிச்சை நிலையத்தை அமைத்துக்கொடுத்துள்ளனர்.

மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ். சுகந்தனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்எம். சமன்பந்துல சேனா, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், மத்திய சுகாதார அமைச்சின்  பிரதி பணிப்பாளர் நாயகம் திட்டமிடல்  எஸ் சிறிதரன் வடக்கு மாகாண சுகாதார  அமைச்சின் செயலாளர்  பி. செந்தில்னந்தன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந.சரவணபவன்  கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தின் தாலைவர் ஜெயசுந்தர மற்றும் வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04