அரசாங்கத்தின் செயற்பாட்டால் இம்முறை பெரும்போகத்தில் அதிக விளைச்சலை எதிர்பார்க்க முடியாது - தயாசிறி

Published By: Gayathri

17 Oct, 2021 | 05:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பெரும்போக விவசாயத்திற்கு சேதன பசளை என்று குறிப்பிட்டுக் கொண்டு இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஒருவர் மாத்திரமே இதனை சேதன பசளை என குறிப்பிட்டுக் கொள்கிறார். இம்முறை பெரும்போகத்தில் அதிக விளைச்சலை எதிர்பார்க்க முடியாது.

ஆகவே அவசர அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என பல முறை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்று தேசிய ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாடசாலைக்கு செல்லாத அரசியல்வாதிகள் தான் ஆசிரியர்களை தாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆசிரியர்களுக்கு எதிராக பெற்றோரை தூண்டி விடுகிறார்கள்.

பெற்றோர் ஆசிரியர்களுக்கு எதிராக ஒருபோதும் செயற்பட கூடாது. ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினர் சற்று விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை தாழ்மையுடன் வலியுறுத்துகிறோம் எனவும் குறிப்பிட்டார்.

நிகவெரடிய – கல்கந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியதன் பின்னர் தான்தோன்றித்தனமாக செயற்படாமல் அரசாங்கம் மக்களின் நியாயமான கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

உரம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கிராமத்தில் வாழும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் குறிப்பிட்டேன். 

பெரும்போக விவசாயத்திற்கு தயாராகிய விவசாயிகள் தற்போது உரம் இல்லாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும்போக விவசாயத்திற்காக தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரம் இரசாயன உரம் என்பதை உறுதியாக குறிப்பிடுவேன். 

ஒரு நபர் மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்கிறார் அது இரசாயன உரம் அல்ல; சேதன பசனை உரம் என்று.

ஒரு தொன் உரத்தின் விலை 400 டொலர்களாக உள்ளது. அப்போது யூரியா உரத்தின் ஒரு டொன்னின் விலை விலை 225 டொலர்களாக காணப்பட்டது. 

விலை குறைவான போது உரம் இறக்குமி செய்திருந்தால் தற்போது உர பிரச்சினை தோற்றம் பெற்றிருக்காது.

நூற்றுக்கு ஐம்பது வீதம் இரசாயன உரத்தையும், மிகுதி ஐம்பது வீதம் சேதன பசளையும் பாவித்தால் உர பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காண முடியும் என விவசாயிகள் குறிப்பிடுகிறார்கள்.

இன்னும் 15 நாட்களுக்குள் தமக்கு உரம் கிடைக்காவிடின் விவசாயத்தை முழுமையாக கைவிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

உர பிரச்சினையின் காரணமாக பெரும்போகத்தில் அதிக விளைச்சலை இம்முறை எதிர்பார்க்க முடியாது. 

வரலாற்று ரீதியிலான பிரச்சினைகளின் போது தேங்காய் சம்பலை செய்து சோற்றுடன் சாப்பிட்டுள்ளோம். இன்று அதுவும் இல்லாமல் போய் பட்டினியால் மரணிக்க நேரிடுமா? என மக்கள் எண்ணுகிறார்கள்.

பெரும்போகத்தில் அதிக விளைச்சல் கிடைக்காவிட்டால் சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும். இதற்கு தீர்வாக பிற நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும்.

உரம் தொடர்பில் எடுத்த தவறான தீர்மானத்தினால் இப்பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. 

ஜனாதிபதியின் சேதன பசளை திட்டம் சிறந்தது. இருப்பினும் அதனை பத்து வருட காலத்திற்கு முன்னிருந்து செயற்படுத்தியிருக்க வேண்டும்.

தூரநோக்கு திட்டமில்லாமல் இரசாயன உரம் தடை செய்யப்பட்டமையினால் பெரும் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளது.

ஆகவே உரப்பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55