கட்டுநாயக்கவில் ஜேர்மன் விமான நிறுவனம் சந்தித்த சிரமங்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

Published By: Vishnu

17 Oct, 2021 | 11:11 AM
image

இலங்கை அதிகாரிகளின் கவனக் குறைவு காரணமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜேர்மன் விமான நிறுவனம் சந்தித்த சிரமங்கள குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜேர்மனியில் இருந்து மாலைதீவுக்கு 226 பயணிகளுடன் பயணித்த ஜேர்மன் விமானம் மாலைதீவு வான்வெளியில் ஏற்பட்ட சீரற்ற நிலை காரணமாக செப்டம்பர் 26 ஆம் திகதி முற்பகல் 11.25 மணியளவில் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பின்னர் குறித்த விமானம் பிற்பகல் ஒரு மணியளவில் நாட்டை விட்டு வெளியேற முற்பட்டபோது, விமான நிலையத்தில் கடன் அட்டை இயந்திரங்கள் செயலிழந்ததால், ஜேர்மன் பட்டய விமான நிறுவனமான காண்டோர், தரையிறங்கும் கட்டணம் செலுத்த ஒரு மணி நேரம் தாமதத்தை எதிர்கொண்டனர்.

மேலும் விமான நிலைய அதிகாரிகள் தாமதம் காரணமாக விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்த போதிலும், இலங்கை விமான நிலைய அதிகாரிகள் தாமதமாக செலுத்தும் அபராதக் கட்டணத்தில் கூடுதலாக 48 அமெரிக்க டொலர்களை வசூலிக்க நடவடிக்கை எடுத்ததால் இந்த சம்பவத்திற்கு சர்வதேச கவனம் செலுத்தப்பட்டது.

இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவன நடவடிக்கை பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.

அதேநேரம் இந்த சம்பவத்தை தெளிவுபடுத்தி எழுத்துப்பூர்வ அறிக்கை ஜேர்மன் விமான நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27