கனடா நாட்டின் பிரிட்டிஸ் கொலம்பியா மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறியவர் ஆவார்.

வான்கூவரில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992 ஆம் ஆண்டு சட்டக்கல்வியை வள்ளியம்மை முடித்து, 1995 ஆம் ஆண்டு முதல் சட்டத்தரணியாக பணியில் இணைந்துக்கொண்டார்.

இந்தியா-கனடா வியாபார அமைப்பின் தலைவராகவும், தேசிய அமைப்பின் இயக்குனராகவும் பணியாற்றி இரு நாடுகளின் வர்த்தக உறவை மேம்பட செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.