வஹப்வாதிகளிடமிருந்து  சுபி முஸ்லிம்களை பாதுகாக்கவும்  - பொதுபல சேனா பொலிஸ் மாதிபருக்கு கடிதம்

Published By: Digital Desk 4

15 Oct, 2021 | 09:57 PM
image

(செய்திப்பிரிவு)

முகமது நபியின் பிறந்த நாளை முன்னிட்டு சுபி முஸ்லிம் சமூகத்தினர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள நிலையில் வஹப்வாத குழுவினர் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றமை அவதானத்திற்குரியது.

ஆகவே சுபி முஸ்லிம் சமூகத்தினரது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொலிஸ் மா திபருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

Articles Tagged Under: பொதுபல சேனா | Virakesari.lk

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

முகமது நபிஸல் அவரது பிறந்த தினத்தையொட்டி இம்மாதம் .இந்நாட்டு சுபி முஸ்லிம் சமூகத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளை இலக்காகக் கொண்டு  வஹப்வாத குழுவினர் முறையற்ற செயற்பாடுகளின் ஈடுப்பட்டு வருவதை கண்காணித்து வருகிறோம்.

கடுமையான முறையில் திட்டுவதும், அச்சுறுத்தல் ஆகியவை கடந்த வாரங்களில் இடம்பெற்று வருகின்றன.இதன் உச்சக்கட்டமாக  புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள அம்பலம் மொஹாதீன் முஸ்லிம் பள்ளிவாசலில் ' சுப்ஹானு மவ்லுன் பராயதய 'வில் ஈடு;ப்பட்டிருந்த சுபி பக்தர்கள் பலரை இலக்காகக் கொண்டு வஹப்வாதிகள் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளார்கள்.

அல்லாஹ் கடவுளின் தூதுவராக இஸ்லாம் மதத்தில் குறிப்பிடப்படும் முகமது நபியை வணங்குதலை வஹப்வாதிகள் புறக்கணிக்கிறார்கள்.

அல்லாஹ் கடவுளை வணங்குவது சிறந்தது என அவர்கள் கருதுகிறார்கள்.இருப்பினும் இலங்கையில் உள்ள சுபி முஸ்லிம் சமூகத்தினர் நபிஸல் அவரது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்கள்.இதனால் அவர்கள் வஹப்வாதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

ஆகவே இம்மாதம் நபிஸல் அவரது பிறந்த நாளை கொண்டாடும் இலங்கைவாழ் சுபி முஸ்லிம் சமூகத்தினரது பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09