இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

Published By: Digital Desk 2

15 Oct, 2021 | 06:11 PM
image

இலங்கையில் அச்சகத்தார் சங்கம் நாட்டில்  அச்சு தொழிலில்  ஈடுபடுவோரின்  நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிஉயர் அமைப்பாகும்.

நாட்டின்  அச்சுத் தொழில் துறையை பாதுகாப்பதற்கும் முன்னேற்றகரமான முறையில்  அபிவிருத்தி செய்வதற்கும்  இச்சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

அச்சக உரிமையாளர்கள், அச்சு  தொழில் துறைசார்ந்த  விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குவோர் உட்பட அச்சிடுதல்  தொழில்துறையை  இச்சங்கம் முழுமையாக  பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

 இலங்கை அச்சகத்தார் சங்கம் 1956 இல் நிறுவப்பட்டது, தொழில்துறை சார்ந்த சகலரையும் நிலையான  விதத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் தொழில்துறை  ஆரோக்கியமானதாகவும் நீடித்ததாகவும்  மேம்படுவதற்கு அதி உச்ச பட்ச ஆதரவை   இந்த சங்கம் வழங்கிவருகிறது.

பல்வேறு நிகழ்வுகள், கருத்தரங்குகள் மற்றும் இணையவழிக்  கருத்தரங்குகளை  தளர்வடையாமல்   ஏற்பாடு செய்வதன் மூலம் கற்றுக்கொள்வதற்கான  கலாசாரத்திற்குள் பிரவேசித்து கொவிட் 19  தொற்றுப்  பரவலுக்கு முகம் கொடுக்க அச்சகத்தார் சங்கம்  உதவியது.

இலங்கையை பிராந்தியத்தின் 'அச்சு தொழிலுக்கான கேந்திரம்'  ஆக உருவாக்குவதே  சங்கத்தின்  தொலைநோக்காகும்.

இலங்கை அச்சகத்தார் சங்கமானது,  சங்கத்தினதும்  அதன்  உறுப்பினர்களினதும் நலன் கருதி தேசிய மற்றும் சர்வதேச  சங்கங்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை , தேசியவர்த்தக  சம்மேளனம் வணிகம், இலங்கை முதலாளிமார் சம்மேளனம் , மார்காம் கலெக்ட்டிவ்  மற்றும் ஐ என்  ஜி ஆர் ஐ என் [INGRIN] இன்ஸ்டிடியூட்  & ஏ எம் பி கிராபிக்ஸ் போன்ற  உள்ளூர் நிறுவனங்கள் சங்கம் நெருக்கமாக செயற்பட்டுவருகிறது. எப் ஈஎஸ் பிஎ [  FESPA]- பெடெரேஷன்ஒப்   ஸ் கிரீனிங் பிரின்டிங் அஸோஸியே ஷன்ஸ் , ஏசியா ,பிரின் ட்போரம்   WPCF- வே ர்ல்ட்  பிரிண்ட் ஏ எம் பி கம்யூனிகேஷன் போரம்  எ ஜி எக் ஸ்எ  [ AGXA] - அச்சிடுதல் , வெளியீடு மற்றும் பொதியிடல்  வளங்கள் அமைப்பு,எ ஐ எப் எம் பி   [AIFMP] - அகில இந்திய பாரிய  அச்சக உரிமையாளர்  சம்மேளனம் ஆகிய சர்வதேச சங்கங்களுடன்  இலங்கை அச்சகத்தார் சங்கம் தொடர்புகளை  பேணிவருகிறது.

முன்னிலை  படுத்துவதற்கான  ஒரு முக்கியமான ஒத்துழைப்பானது  இலங்கை ஏற்றுமதி  அபிவிருத்தி சபையுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாகும்.

 சங்கத்தின் உறுப்பினர்கள் ஏற்றுமதி தொடர்பாக  பல்வேறு அனுகூலங்களை அனுபவிப்பதற்கான  உரிமை உள்ளது.

அத்துடன் இலங்கையின்  ஏற்றுமதி  சந்தையை அதிகரிப்பதற்கு  திறம்பட பங்களிப்பு செய்யமுடியும். ஏற்றுமதிக்கான  வழிகள் ஊடாக இலங்கையின் சிறிய , நடுத்தர தொழில் துறைக்கு பலதரப்பட்ட அனுகூலங்களை வழங்குவதற்கு ஏற்றுமதி  அபிவிருத்திச்சபையுடன்  சங்கம் நெருக்கமாக  செயற்படுகிறது.

 

இலங்கையில் அச்சுத்தொழில் துறை சார்ந்த அறிவு மற்றும்திறன்களுக்கு  ஆதரவாக   சங்கமானது  பல்வேறு கருத்தரங்குகள், இணையவழி கருத்தரங்குகள்  மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றது.

பாடசாலையை விட்டு  வெளியேறுவோருக்கான தொழில்  வழிகாட்டி  நிகழ்ச்சித்திட்டம் சங்கத்தினால் நடத்தப்படும் திட்டங்களில் முன்னுரிமையானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அச்சுத்தொழில் துறையில் இளைஞர்கள் , பாடசாலையை  விட்டு வெளியேறுபவர்கள் இணைத்துக்கொள்ளும்  விதத்தில் அவர்களை    கவரும் நோக்கத்துடன் ,சங்கம் விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறைகளை சங்கம்  நடத்தவுள்ளது.

ஸ்ரீலங்கா  பிரின்ட் , பிராந்திய அச்சுத் தொழில் விருது வைபவம்  போன்ற விருது வழங்கும் வைபவங்களை  .இந்த சங்கம் ஒவ்வொரு வருடமும் நடத்துகிறது.

 செயற்பாடுகளின் மற்றொரு சிறப்பம்சம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஸ்ரீ  லங்கா பிரிண்ட் கண்காட்சி முன்னிலைபடுத்தும் செயற்பாடுகளில் மற்றொன்றாகும். அத்துடன் வருடத்திற்கு 4 இதழ்கள் கொண்ட ஒரு தகவல் சஞ்சிகையை  இலங்கை அச்சகத்தார் சங்கம் வெளியிடுகிறது.

இலங்கை அச்சுப்பொறிகள் சங்கம் அரசாங்கத்துடன் கடுமையாக பரப்புரை செய்கிறது மேலும் அச்சுத்தொழில் துறையினரின் பிரச்சினைகள் , கவலைகளுக்கு  ஒரு தீர்வைக்பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்துடன் அச்சகத்தார்  சங்கம் தீவிரமாக  பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருகிறது.

இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் வருடாந்த  பொதுக் கூட்டம் 2021 ஜூலை 30இல் நடைபெற்றது தலைவர்  டெலன் சில்வாவுக்கு   பின்னர் அன்றைய தினம் அச்சகத்தார் சங்கத்தின் புதிய தலைவராக  பீற்றர்  டெக்கர் பதவியேற்றுள்ளார்.

அதே வேளை 2021-2022 ஆம் ஆண்டிற்கான  ஒரு புதிய நிறைவேற்று குழுவும் தெரிவுசெய்யப்பட்டது.

சங்கத்தின்ஆற்றல்களை  வலுப்படுத்தி அதனை  புதியபரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களையும்  சங்கம்  கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56