நாகொட பகுதியில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த ஐவரையும் நேற்று (19) மாலை  கோனகொட பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை இன்று (20) களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.