விஜயதசமி - வெற்றிகள் அருளும் விசேட நன்னாள் இன்று

Published By: Digital Desk 2

15 Oct, 2021 | 08:33 AM
image

தசமி என்றால் பிரதமையிலிருந்து பத்தாம் நாள் வரும் திதியாகும்.விஜயதசமி தென்னகப்  பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும்,     bவங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது. இந்து நாட்காட்டியில் புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் தசமி திதியன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. 

முந்தைய ஒன்பது நாட்களும், நவராத்திரி விழாவாக முப்பெரும் தேவியர்களான துர்க்கை,லக்ஷ்மி,சரஸ்வதி ஆகிய மூர்த்திகளின் வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகிறது.

இராமாயணத்தில், இராவணன் சீதையை கடத்தினான். சீதையை விடுவிக்குமாறு இராமன் ராவணனிடம் கோரினார், ஆனால் இராவணன் மறுத்துவிட்டார். இந்நிலைமை அதிகரித்து போருக்கு வழிவகுத்தது. இப்போரில் இராமன் இராவணனை, விஜயதசமியன்று அழித்து போரில் வெற்றி பெற்றார் என்று கூறப்படுகிறது. 

உலகை ஆட்டிப்படைத்த மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கையாக அவதரித்து, 9 நாட்கள் நீடித்த போரானது, விஜயதசமியன்று முடிவுக்குவந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக அதாவது விஜயதசமியாக  கொண்டாடப்படுகிறது. 

இதனையொட்டி கலைநிகழ்ச்சிகள், கோலாகலமாக இன்றளவிலும் நடைபெற்று வருகின்றன. அந்த வழக்கத்தை மன்னராட்சி முடிந்த பின்னரும், தற்போதும் கடைபிடித்து வருகின்றனர். 

இந்திய கர்நாடக மாநிலத்தில் விஜயதசமியானது ஓர் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் விஜயதசமி அன்று, மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிற மொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தொன்மை நிறைந்த நம்பிக்கை அம்பிகை அடியார்களுக்கு என்றும் உண்டு.

இதற்கு முந்தைய நாளான நவமியில் சரஸ்வதியை  வணங்கி கல்வி, கலை கருவிகளுக்கும் தொழிற்கருவிகளுக்கும் வாகனங்களுக்கும் பூஜைநடத்தி ஆயுத பூஜை செய்வதும் வழக்கம். 

எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும்...

2024-04-18 12:15:34
news-image

வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளத்தில் நாகர் கால...

2024-04-18 10:23:08
news-image

'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள் 

2024-04-11 14:47:43
news-image

திருக்கோணேஸ்வரத்தில் சாமி தூக்கிய சுற்றுலா பயணிகள்...

2024-04-06 11:06:59
news-image

சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்

2024-03-28 16:01:41
news-image

நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய பங்குனி...

2024-03-19 16:13:26
news-image

ஈழத்து லிங்காஷ்டகம் : மறந்துபோன வரலாறுகள்!...

2024-03-10 13:57:26
news-image

இன்று மகா சிவராத்திரி!  

2024-03-08 11:05:25
news-image

இன்று சர்வதேச தாய்மொழி தினம் 

2024-02-21 12:08:36
news-image

சிவானந்தினி துரைசுவாமி எழுதிய தந்தை -...

2024-02-07 13:18:00
news-image

வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் :...

2024-01-29 17:43:35
news-image

அயோத்தி ராமர் கோவிலை இந்தியப் பிரதமர்...

2024-01-22 15:53:05