இலங்கை அகதி தீக்குளிக்க முயற்சி

Published By: Robert

20 Sep, 2016 | 10:07 AM
image

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். 

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த மனோஜ் (33) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்து, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்தார். 

இவருக்கு நிரோஜா (22) என்ற மனைவியும், தைசிகா (5), சாய்ஷிகா (1) என்ற இரு மகள்களும் உள்ளனர். 

இவர், தான் வசிக்கும் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தாராம். ஏலத்தில் பணம் எடுத்தவர்களில் 16 பேர் பணம் தராமல் ஏமாற்றி விட்டனராம். பணத்தை திருப்பிக் கேட்டால் தாக்கினார்களாம். இது குறித்து மண்டபம் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். 

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த மனோஜ் திடீரென தான் மட்டும் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைக்க முயன்றார். 

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் அவரை தடுத்து, கேணிக்கரை பொலிஸ்; நிலையத்துக்கு அழைத்து சென்றனர் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38