அமெ­ரிக்க நியூ­ஜெர்­ஸியில் குப்பைக் கூடையில் கண்­டெ­டுக்­கப்­பட்ட பையில் வெடிக்கும் உப­க­ர­ணங்கள்

Published By: Raam

20 Sep, 2016 | 09:53 AM
image

அமெ­ரிக்க நியூஜெர்ஸி புகை­யி­ரத நிலை­யத்­துக்கு அருகில் காணப்­பட்ட சந்­தே­கத்­துக்­கி­ட­மான உப­க­ர­ண­மொன்றை குண்டு செய­லி­ழக்க வைக்கும் பிரி­வினர் ரோபோ­வொன்றைப் பயன்­ப­டுத்தி நேற்று திங்­கட்­கி­ழமை செய­லி­ழக்க வைக்க முயன்ற போது அது வெடித்­துள்­ளது.

அந்த உப­க­ர­ண­மா­னது எலி­ஸபெத் பிராந்­தி­யத்திலுள்ள மேற்­படி புகை­யி­ரத நிலை­யத்­துக்கு அண்­மையில் குப்பைத் தொட்­டி­யொன்­றினுள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பையொன்றில் இருந்த 5 உப­க­ர­ணங்­களில் ஒன்­றெனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வார இறு­தியில் நியூயோர்க் மற்றும் நியூ­ஜெர்­ஸியில் இடம்­பெற்ற குண்டு வெடிப்­புகள் மற்றும் மின்­னே­ஸோ­ராவில் இடம்­பெற்ற கத்திக்குத்துச் சம்­பவம் என்­ப­வற்றைத் தொடர்ந்து இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

நியூ­யோர்க்கின் செல்ஸி பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற குண்டு வெடிப்பில் 29 பேர் காய­ம­டைந்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் நியூ­ஜெர்­ஸி­யி­லுள்ள எலி­ஸபெத் பிராந்­தி­யத்தில் மேற்­படி முதுகில் சுமந்து செல்லும் பையில் கண்­டெ­டுக்­கப்­பட்ட உப­க­ரணம் தமது கட்­டுப்­பாட்டின் கீழ் வெடிக்க வைக்­கப்­ப­ட­வில்லை என பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

அந்த உப­க­ர­ணத்தை பரி­சோ­தித்த ரோபோ, அதன் கம்பி இணைப்­பொன்றை துண்­டித்த வேளை அது திடீ­ரென வெடித்­த­தாக அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.

உப­க­ரணம் காணப்­பட்ட பையை அவ்­வ­ழி­யாக சென்ற இருவர் ஏதா­வது பெறு­மதி மிக்க பொருட்கள் இருக்­கின்ற­னவா எனப் பார்க்க அதனை குப்பைத் தொட்­டி­யி­லி­ருந்து வெளியில் எடுத்த போது, அதற்குள் பல உப­க­ர­ணங்­களும் குழாய்­களும் கம்பி இணைப்­பு­களும் இருப்­பது கண்டு அவர்கள் திகைப்­ப­டைந்­த­தா­கவும் தொடர்ந்து அவர்கள் அந்தப் பையை ஒரு மூலையில் வைத்து விட்டு அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­த­தா­கவும் பிராந்­திய மேயர் கிறிஸ்­ரியன் பொல்வேஜ் கூறினார்.

நியூ­யோர்க்கில் வெடித்த குண்டும் அதற்கு அண்­மையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட உப­க­ர­ணமும் கடந்த 2013 ஆம் ஆண்டு போஸ்டன் குண்டு வெடிப்­பு­களில் உப­யோ­கிக்­கப்­பட்­ட­தை­யொத்த வெடி­பொ­ருட்கள் நிரப்­பப்­பட்ட அமுக்க அடுப்பு உப­க­ர­ணங்கள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. முத­லா­வது குண்டு வெடித்­ததில் பலர் காய­ம­டைந்த அதேசமயம் இரண்டாவது குண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.

அந்த இரு குண்டுகளும் ஒரே வகையைச் சேர்ந்தவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த குற்றச்சாட்டில் ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17