பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கம், மலையக மக்களுக்கான காணி உரிமையை வழங்கக் கோரி, ஒரு இலட்சம் கையொப்பங்களைத் திரட்டி ஜனாதிபதிக்கு வழங்கும் நடவடிக்கையில் ஊவா மாகாணத்தில் பண்டாரவளை, ஹப்புத்தளை, பதுளை ஆகிய நகரங்களில் கையெழுத்து வேட்டையொன்று இடம்பெற்றது.

பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.டி.கணேசலிங்கம் தலைமையில் மேற்படி கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.

மேற்படி நடவடிக்கையின் முன்னோடி நடவடிக்கையாக தோட்டங்கள் தோறும் பொது மக்களின் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, நகரங்களை இலக்கு வைத்து கையொப்பங்களை பெறும் நடவடிக்கையின் நான்காம் கட்டமாக ஊவா மாகாணத்தில் நடைபெற்றதாக பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.டி.கணேசலிங்கம் இதன்போது தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)