40 ஆயிரம் ஆப்கான் அகதிகளுக்கு புகலிடம் வழங்கும் கனடா

Published By: Digital Desk 3

13 Oct, 2021 | 02:00 PM
image

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில்  ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். 

இந்நிலையில்,  40,000 ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக கனேடிய அரசாங்கம் கூறியுள்ளதுடன் அகதிகளை மீளக்குடியமர்த்துவதற்கான ஆதரவை அதிகரிக்குமாறு ஏனைய நாடுகளை கனடா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,

"கனடா 40,000 ஆப்கான் அகதிகளை வரவேற்கிறது, அகதிகளை பாதுகாப்பாக மீளக்குடியமர்த்துவதற்கு தங்கள் ஆதரவை அதிகரிக்குமாறு மற்றவர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்“ என பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து ஜி 20 தலைவர்களுடன் பிரதமர் ட்ரூடோ உரையாடிய பிறகு இதனை தெரிவித்துள்ளார்.

"இன்று, நான் ஜி 20 தலைவர்களுடன் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து பேசினேன். உலக சமூகம் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியை அணுகுவதை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம் , ” என  பிரதமர் தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கைப்பற்றிய பிறகு பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைகளுக்கு வெளியே தஞ்சம் புகுந்த ஆப்கானியர்களின் நிலைமை குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுவதால், நாட்டில் மனிதாபிமான நெருக்கடி நிலவுவதாக சர்வதேச சமூகங்கள் தெரிவித்துள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08