எரிமலை சீற்றத்தால் ஸ்பெயினில் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Published By: Digital Desk 3

13 Oct, 2021 | 02:10 PM
image

ஸ்பெயினில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் 700 முதல் 800 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.

ஸ்பெயினில் கனரி தீவுக்கூட்டங்களில் ஒன்றான லா பல்மா என்ற தீவில் உள்ள ஹம்ரி விஜா என்ற எரிமலையில் கடந்த  செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி திடீரென சீற்றம் ஏற்பட்டது.

எரிமலை சீற்றம் ஏற்பட்ட பகுதியில் இருந்து இதற்கு முன்னர் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தொடர்ந்து 24 நாட்களாக எரிமலை சீற்றம் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

எரிமலை குழம்பு வெளியேறி 595 (5.95 சதுர கிமீ) ஹெக்டேயர் நிலப்பரப்பில் பரவியுள்ளது.

 1,281 கட்டிடங்கள் எரிமலை சீற்றத்தால் தீக்கிரையாகியுள்ளன.

மேலும் இது சுமார் 60 ஹெக்டயர் (0.6 சதுர கிமீ) புதிய நிலத்தை உருவாக்க வழிவகுத்தது. திங்களன்று மலையில் இருந்து வழிந்தோடிய எரிமலை குழம்பு  சீமந்து தொழிற்சாலையை அழித்துள்ளது.

எல் பாசோ மற்றும் லாஸ் லானோஸ் டி அரிடேன் நகராட்சிகளைச் சேர்ந்த 3,500 பேர் தீங்கு விளைவிக்கும் வாயுக்களால் தற்காலிகமாக தங்கள் வீடுகளில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சல்பர் டை ஒக்சைட் அளவீடுகள் மற்றும் தொடர்ச்சியான சிறிய நிலநடுக்கங்களினால்  இந்த எரிமலை வெடிப்பு மிக நீண்ட காலம் நீடிக்கும் என்பதைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் புதன்கிழமை லா பால்மாவுக்கு மற்றொரு விஜயத்தை மேற்கொள்வதாகக் கூறினார், இது மூன்று வாரங்களில் நான்காவது விஜயமாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க சுமார் 237.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நாட்டு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த தீவின் பொருளாதாரம் முக்கியமாக சுற்றுலா மற்றும் வாழைப்பயிர் செய்கை அடிப்படையாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47