மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரங்களை வழங்கும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

Published By: Vishnu

13 Oct, 2021 | 07:42 AM
image

மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இன்று (13) முதல் இரண்டு வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை வெளியிடும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களுக்கு அசெளகரியம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கணினி கட்டமைப்பை வழமை நிலைக்கு கொண்டு வரும் வரை தற்காலிகமாக மேல் மாகாணத்தில் வாகன அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இடை நிறுத்தப்படும்.

நேற்று முதல் காலாவதியாகும் வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையும், டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெறவேண்டிய அனுமதி பத்திரங்களும் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் பல இடங்களில் வழங்கப்படும்.

மேல் மாகாண மோட்டார் வாகன திணைக்களம், களுத்துறை கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் பிரதேச செயலகங்கள் ஆகிய இடங்களில் இந்த நடவடிக்கை இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08