அவிஷ்க - சாமிக்கவின் வலுவான இணைப்பாட்டத்தால் வீழ்ந்தது பங்களாதேஷ்

Published By: Vishnu

13 Oct, 2021 | 07:49 AM
image

ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் நிர்ணயித்த 148 என்ற இலக்கை துரத்திய இலங்கை 19 ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது.

7 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் சமிக்க கருணாரத்ன ஆகியோர் 49 பந்துகளில் 73 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாகும்.

அவிஷ்கா பெர்னாண்டோ 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்காக மிகவும் பங்களிப்பாற்றினார். அதேசமயம் சமிக்க கருணாரத்ன 25 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 29 ஓட்டங்களை எடுத்தார்.

இலங்கை போட்டியில் வெற்றி பெற்ற போதிலும், அணியின் ஏனைய பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த சேவையை பூர்த்தி செய்யவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். 

சமிக்க மற்றும் அவிஷ்கவைத் தவிர பத்தும் நிசங்க மாத்திரம் அதிகபடியாக 15 ஓட்டங்களை எடுத்தார்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை, இலங்கை அணி ஓரளவு முன்னேறியது. குறிப்பாக துஷ்மந்த சமீரா தனித்து நின்றார். 4 ஓவர்களில் 27 ஓட்டங்களை வழங்கிய வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் எதிரணியின் மூன்று விக்கெட்டுகளையும் தகர்த்தெறிந்தார்.

கடந்த சில போட்டிகளில் சிறப்பாக முன்னேறி வந்த லஹிரு குமார, வனிந்து ஹசரங்கா மற்றும் தீக்ஷண ஆகியோர் தங்களின் நான்கு ஓவர்களில் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். தசூன் ஷானக்க 2 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 17 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

பேட்டிங்கில் பங்களாதேஷ் அணிக்காக செளமிய சர்க்கார் 26 பந்துகளில் 34 ஓட்டங்களை எடுத்தார். அவரைத் தவிர, இலங்கை பந்துவீச்சாளர்கள் வேறு எந்த பேட்ஸ்மேன்களையும் 16 ஓட்டங்களை கடக்க அனுமதிக்கவில்லை. 

இலங்கை மற்றும் பப்புவா நியூ கினியா இடையேயான அடுத்த பயிற்சி ஆட்டம் நாளை (ஒக்டோபர் 14) அபுதாபியில் நடைபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09