வீர, வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை !

Published By: Gayathri

12 Oct, 2021 | 08:47 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஒழுக்க விதிகளை மீறும் எந்தவொரு வீரராகவும், வீராங்கனையாகவும் இருந்தாலும் அவர் எப்படிப்பட்ட திறமைமிக்கவராக இருப்பினும் அவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டணை விதிக்கப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

டோக்கியோ பராலிம்பிக் வீரர்களை கெளரவிக்கும் நிகழ்வு  இன்று விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்றது. இதில்  கலந்துகொண்டதன் பின்னர் பிரத்தியேகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஒழுக்க விதிகளை மீறும் எவராக இருப்பினும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அது கிரிக்கெட் வீரர்களாக இருக்கலாம். மெய்வல்லுநர் வீர, வீராங்கனையாக இருக்கலாம். எவராக இருப்பினும் ஒழுக்க விதிகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இந்தியாவின் பத்தியாலாவில்அண்மையில் நடைபெற்ற  இந்திய மாநில மெய்வல்லுநர் விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கையின் மெய்வல்லுநர்கள் சிலர் அங்கு சென்றிருந்தனர். 

அதன் பின்னர், நாடு திரும்பிய இலங்கை மெய்வல்லுநர் குழாத்தினர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக மாத்தறையில் உள்ள நில்வலா தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்டனர். 

எனினும், அங்கு போதிய வசதிகள் இல்லை எனக்கூறிய இலங்கை மெய்வல்லுநர் குழாத்தினருக்கு பி.சீ.ஆர். பரிசோதனை எடுக்கப்பட்டதையடுத்து, கொழும்பு சுகததாச ஹோட்டலில் தங்க‍வைப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

சுகததாச ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட முதல் நாளிலேயே, இலங்கை மெய்வல்லுநர் குழாத்தில் இடம்பெற்றிருந்தவர்கள் சிலர் தனிமைப்படுத்தல் சட்டத்தையும் ஒழுக்க விதிகளையும் மீறியுள்ளனர். 

இந்த விவகாரம் குறித்து இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தால் மூவர் அடங்கிய ஒழுக்காற்று விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.

வீர, வீராங்கனைகள் மூவர், பயிற்றுநர் மற்றும் அணி முகாமையாளர்  என ஐந்து பேருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை அறிக்கையை மூவரடங்கிய ஒழுக்காற்று விசாரணைக் குழு இலங்கை  மெய்வல்லுநர் சங்கத்தின்  ஊடாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பியது.

இலங்கை மெய்வல்லுநர் குழாத்துக்கு பொறுப்பாகவிருந்த அணி முகாமையாளர் ஏ.எஸ்.என். அபேசேகர, பயிற்றுநர் விமுக்தி டி சொய்சா, மெய்வல்லுநர்களான காலிங்க குமாரகே, ஷெலிண்டா ஜென்சன், சுகந்தி லக்சிக்கா ஆகிய ஐவருக்கு எதிராகவே ஒழுக்காற்று நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இவர்களுக்கான தண்டணை 2021.08.16  ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மூவரடங்கிய விசாரணைக் குழுவினால் விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம், இலங்கை மெய்வல்லுநர் சங்கம் மற்றும் வீர,வீராங்கனைகள், பயிற்றுநர், அணி முகாமையாளர் ஆகியோருக்கும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, வீர, வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட 4 மாத கால உயர் பயிற்சி நெறிக்கான கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் சொத்துக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பயிற்றுநர் மற்றும் முகாமையாளருக்கு ஆகிய இருவருக்கும் ஒரு வருட காலத்துக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35