பாசிக்குடா கடலில் காணாமல் போன அண்ணனின் சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டதை தொடர்ந்து தம்பியின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. சடலங்களை பார்வையிட்ட அக்கா மயக்கமுற்று விழுந்தமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விரிவாக தெரிய வருமாறு 

வாழைச்­சேனை பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற  தமது  இரு  மகன்­மா­­ரும் நீரில் மூழ்கி   உயி­ரி­ழந்த  தக­வலை கேள்­வி­யுற்ற  பெற்றோர்  துக்கம் தாங்­காத நிலையில்   இன்று காலை தூக்­கிட்டு தற்­கொலை செய்துகொண்டனர்.

கல்­குடா விஷ்னு கோவில் வீதியைச்  சேர்ந்த  வேலுப்­பிள்ளை  சண்­முகம்   (வயது 54), அவ­­ரது மனை­வி­யான யோக லக்ஷ்மி (வயது 46) ஆகிய இரு­வ­ருமே தமது இரு மகன்மார் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதை கேள்வியுற்று தமது வீட்டின் முன்னால் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கி இவ்வாறு உயிரிழந்தனர்.

21 வயதான சண்முகம் சதீஸ் குமார், 18 வயதான சண்முகம் சுரேஷ் குமார் ஆகிய இளைஞர்களே கடலில் மூழ்கி உயிரிழந்த இரு மகன்மாராவர். 

பாசிக்குடா கடலில்  நேற்று  பிற்பகல் 2.00 மணியளவில் ஐந்து நண்­பர்கள்   குளிப்­ப­தற்­காக  சென்­றுள்­ளனர்.  

இவர்­களில் ஒரு­வரைத் தவிர  நால்வர்   கடலில்  குளித்­துக்­கொண்­டி­ருக்கும் போது   நீரில் அடித்து செல்­லப்­பட்­டுள்­ளனர். 

இத­னை­ய­டுத்து  கரையில் நின்ற நண்­பன் கூச்­ச­லிட்டு  உத­வி­கோ­ரி­யுள்ளார்.  

இதன்­போது  பிர­தே­சத்தின்  மீனவர்­களின் உத­வி­யுடன் இரண்டு  இளை­ஞர்கள்  காப்­பாற்­றப்­பட்டு  வாழைச்­சேனை  வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.  

ஏ. ரஜி­நா­தன் (வயது 16), கே. டிலக்­­ஸ{­மனன் (வயது 16) ஆகி­யோரே இவ்­வாறு காப்­பாற்­றப்­பட்­ட­வர்­க­ளாவர்.  

எனினும் சிகை அலங்கார தொழிலாளியான சண்­முகம் சதீஸ் குமார்  (அண்ணன் வயது 21) மற்றும் அவ­ரது சகோ­த­ரனான கல்குடா நாமகள்   வித்தியாலயத்தில் தரம்  11 இல்  கல்வி பயிலும்  சண்­முகம்  சுரேஷ் குமார் (வயது 18) ஆகியோர் அலைகளால் அல்லுண்டு செல்லப்பட்டு காணாமல் போயினர்.

 இந் நிலையில் இவ்வாறு கடலில் மூழ்கி காணாமல் போன மேற்படி இரு சகோதரர்களில் அண்ணனின் சடலம் காலையில் மீட்கப்பட்டதோடு தம்பியின் சடலம் பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

இருவரின் சடலங்களும் பாசிக்குடா கடற்கரையில் அமைந்துள்ள  ஹோட்டலுக்கு பின்னால் இருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று  இரு­ம­கன்­மாரும் கடலில் மூழ்­கி­யதை  கேள்­வி­யு­ற்ற  பெற்­றோர்கள்  பெரும்  துய­ர­டைந்­தி­ருந்த நிலையில்  வீட்­டுக்கு முன்னால் உள்ள மரத்தில்   தூக்­கிட்டு உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த சம்­பவம்  இன்று அதி­காலை  இடம்­பெற்­றி­ருக்­கலாம் என்று  பொ லிஸார்   தெரி­விக்­கின்­றனர். 

சிகை­ய­லங்­கார தொழி­லா­ளி­யான  வேலுப்­பிள்ளை  சண்­முகம்  மற்றும் அவ­ரது மனை­வி ­சண்­முகம் யோக லக்ஷ்மி  ஆகி­யோ­ருக்கு இரண்டு ஆண்­பிள்­ளை­களும் இரண்டு பெண்­ பிள்­ளை­களும்  உள்ளனர். 

இவர்­களில் ஒரு பெண் பிள்ளை  கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்   உயி­ரி­ழந்­தி­ருந்­தார். 

மற்­றொரு  பெண்­பிள்ளை  திரு­மணம் முடித்­துள்ள நிலையில்  அவ­ரது கணவர்  வெளிநாட்டில்  தொழில்­பு­ரிந்து வரு­கின்றார்.  

மகன்­மாரும் பெற்­­றோரும் ஒன்­றா­கவே வாழ்ந்து வந்­துள்­ளனர். 

 இந்த நிலை­யி­லேயே  கடலில் மூழ்கி  மகன்மார் உயி­ரி­ழந்த செய்­தியை அறிந்து  சோகம் தாங்க முடி­யாது  பெற்­றோர்கள்   தூக்­கிட்டு தமது உயிரை  மாய்த்­துள்­ளனர்.  

இந்த  சம்­ப­வத்­தினால்  கல்­குடா,   பட்­டி­ய­டிச்­சேனை கிராமம்  பெரும்  சோகத்தில் மூழ்­கி­யுள்­ளது. 

தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள பெற்றோர்கள் மற்றும் சடலமாக மீட்கப்பட்ட மகன்மார் ஆகியோரின் சடலங்கள் இன்று வாழைச் சேனை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக விஷேட அம்பியூலன்ஸ் வண்டி ஊடாக கொண்டு வரப்பட்டது. 

சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இறந்தவர்களின் இறுதி கிரியைகள் நாளை பிற்பகல் நடைபெறும் என   உறவினர்கள் அறிவித்துள்ளனர்.