லங்கா பிரீமியர் லீக் : 699 பேர் விண்ணப்பம் 

Published By: Gayathri

12 Oct, 2021 | 02:59 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ள லங்கா பிரீமியர் லீக் டி20 போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக 699 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இப்போட்டித் தொடருக்காக விண்ணப்பித்த  699 பேரில் ‍தெரிவு ‍செய்யப்படும் 225 வீரர்களை வகைப்படுத்தும் 'வீரர்கள் வரைபு' (player draft)  எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும். 

இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் குறித்தவொரு அணி அதிகபட்சமாக 6 வெளிநாட்டு வீரர்களை எடுத்துக்கொள்ள முடிவதுடன், விளையாடும் பதினொருவரில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை பங்கேற்கச் செய்ய முடியும். 

இந்த போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், அண்ட்ரே ரசல், டேவிட் மாலன், பாவ் டு பிளெஸ்ஸிஸ், இம்ரான் தாஹிர், ஷயிட் அப்ரிடி உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான இர்பான் பத்தான், யூசுப் பத்தான், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல், சகலதுறை வீரர் அண்ட்ரே ரசல், டுவெய்ன் ஸ்மித்,  இங்கிலாந்தின் லூக் ரைட், லியம் பிளங்கெட், ஸ்டீபன் பின், ஆதில் ரஷீட், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர்களான பகார் சமான், நியூஸிலாந்தின் மிச்செல் மெக்லனகன், ஸிம்பாப்வேயின் சிகந்தர் ராசா உள்ளிட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் வீரர்கள் இப்போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35