இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதும் பயிற்சி போட்டி இன்று

Published By: Gayathri

12 Oct, 2021 | 02:03 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உலக இருபதுக்கு 20 கிரிக்‍கெட் தொடரை முன்னிட்டு இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் மோதும் பயிற்சி போட்டி இன்றைய தினம் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் சுற்றில் இலங்கை கிரிக்கெட் அணி குழு ஏயில் அங்கம் வகிக்கிறதுடன், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பீ குழுவில் அங்கம் வகிக்கிறது. 

பங்களாதேஷ் அணியுடனான பயிற்சிப் போட்டியையடுத்து, எதிர்வரும் 14 ஆம் திகதியன்று பீ குழுவில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு அணியான பப்புவா நியூகீனியா அணியுடன் பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி விளையாடவுள்ளது.

ஓமான் அணியுடனான 2 பயிற்சிப் போட்டிகளில் வெற்றியீட்டிய தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி சிறந்த மனோபலத்துடன் பங்களாதேஷ் அணியுடான பயிற்சிப் போட்டியில் களமிறங்கவுள்ளது. 

இதேவேளை, உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் சுற்று எதிர்வரும் 17 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது. 

இதன் ஏ குழுவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து , நமீபியா ஆகியனவும் பீ குழுவில் பங்களா‍‍தேஷ், ஸ்கொட்லாந்து, ஓமான், பப்புவா நியூ கீனியா ஆகியனவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49