நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகிவருகின்ற சிங்கம் 3 திரைப்படத்தின் வெளியீட்டு திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிங்கம் 3 திரைப்படம் டிசம்பர் 16 திகதி வெளியிடப்படவுள்ளதாக படக்குழுவினர் உத்தியோகப்புர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுவரையில் படத்தின் படப்பிடிப்புகள் 80 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சிங்கம் திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த அனுஷ்கா நடித்து வருகிறார். 

மேலும், ஸ்ருதிஹாசன், தாகூர் அனுப் சிங் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

 இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் வெளியீட்டு திகதியை அறிவிக்கப்போவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். 

அதன்படி, எதிர்வரும் டிசம்பர் 16 திகதி படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.